பரபரப்பான சூழ்நிலையில் விசேட உரையாற்றுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை

யி இளைஞர்கள் அணி திரள்வர் என எதிர்பார்ப்பு
யி தென் பகுதியும் அதிகூடிய கவனம்
யி பேராசிரியர் சொர்ணராஜா, விரிவுரையாளர் குருபரன் கருத்துரை
யி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு
தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் விசேட உரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத் தில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் கரு த்தமர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வி லேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரனின் விசேட உரை இடம் பெறவுள்ளது. 

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் விசேட உரை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாச பதி கலையரங்கில் இடம்பெறுவதாக இரு ந்தபோதிலும் தேர்தல் பணியகத்தின் அறிவு றுத்தலுக்கு அமைய கைலாசபதி கலையர ங்கத்திற்கான அனுமதியை பல்கலைக்கழக நிர்வாகம் இரத்துச் செய்திருந்தது. 
இந் நிலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் விசேட உரையுடன் வடக்கு-கிழக்கு தமிழர் தம் உரி மைகளின் கேடயமாக சர்வதேச சட்டம் என்ற பொருளில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் முத்துக் குமாரசாமி சொர்ணராஜாவும் இடைக்கால அறிக்கை-மாயைகளைக் கட்டுடைத்தல் எனும் பொருளில் யாழ்.பல்கலைக்கழக சட் டத்துறை தலைவர் குமாரவடிவேல் குருபர னும் கருத்துரை வழங்கவுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று நடைபெறும் இக் கருத்தரங்கு தொடர்பில் தென் பகுதி அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் அதீத கவனம் செலுத்தியுள்ளதாகவும்,
இன்றைய இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்பர் என்றும் அதிலும் குறிப் பாக இளைஞர்கள் அணி திரளும் வாய்ப்பு உள்ளதாகவும் பொது நோக்குநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.   
இதேவேளை இந்நிகழ்வை பதிவு செய்வ தற்காக தென்பகுதி ஊடகவியலாளர்களும் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila