அரசியல் விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்



இந்த உலகம் உய்வு பெறவேண்டுமாயின் அதற்கான ஒரேவழி அறிவைப் புகட்டுவ தாகவே இருக்கும்.
மீனைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்க கற் றுக் கொடுப்பதே சிறந்த கொடை என்கிறது சீனப் பழமொழி.

எனவே அறிவியல் தலைமுறை தலை முறையாகக் கையளிக்கப்பட வேண்டும். இங்கு அறிவியல் என்பது மெய்ப்பொருள் காணுதல் எனும் பொருளைக் குறிப்பதாகும்.
ஆக, எமது பண்பாடு, பழக்கவழக்கம், எம் வரலாறு என அனைத்தும் கையளிக்கப்படும் போதுதான், அந்தந்த இனங்கள் தமது வாழ் வியலைச் செம்மைப்படுத்தும்.
எனினும் அறிவியலைக் கையளித்தல் என்ற விடயத்தில் எங்கள் இனத்தில் மிகப் பெரிய இடைவெளி இருப்பதை உணர முடிகின் றது.

தனித்து ஏட்டுக் கல்வியைக் கற்றுவிட்டால் அதுவே அறிவு என்று நாம் முடிவு செய்து கொள்கின்றோம்.
ஆனால் ஏட்டுக்கல்வி என்பது அறிவின் ஒரு பகுதி மட்டுமே. இலங்கையின் பாடவிதா னத்தில், வரலாற்றுப் பாடத்தை எடுத்துக் கொண் டால், அதில் திட்டமிட்டு சிங்கள வரலாறுகளே புகுத்தப்பட்டுள்ளன.

தமிழனுக்கும் தமிழர் இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போலவே வரலாற்றுப் புத்தகங்கள் ஆக்கப் பட்டுள்ளன.
சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் திட்ட மிட்டு - தமிழர் வரலாற்றை முற்றாகப் புறந் தள்ளி சிங்களவர்களே ஆதிமுதல் இன்று வரையான ஆட்சித் தரப்பினர் எனக் காட்டப் படுவதை கல்வி என்று நாம் நினைப்போமாக இருந்தால், எங்கள் மண்ணில் தமிழன் வாழ்வு என்பது சொற்பகாலமாகிவிடும்.

எனவே தமிழர் வரலாற்றை எங்கள் பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
அதற்காக தமிழர் வரலாறு என்ற விடயம்   பாடவிதானமாகத் தயாரிக்கப்பட்டு அதனை விசேடமாகப் போதிக்கின்ற நடைமுறைகளை ஏற்படுத்துவதன் மூலமாக, 
சிங்கள வரலாற்று ஆசிரியர்களின் திட்ட மிட்ட சதியை உடைத்தெறிந்து எங்கள் இனத் தின் பெருமையை நிலைநிறுத்த முடியும்.
இவை ஒருபுறமிருக்க எங்கள் இனம் சார் ந்த விடயத்தில் இளம் சமூகத்தின் வகிபங்கு மிகவும் அவசியமானது.
இளைஞர் சமூகம் கூறுவதை அங்கீகரிக் கும் மிக உயர்ந்த பண்பாடு எங்கள் இனத்தில் உண்டு.

எனினும் அண்மைக்காலமாக அரசியலில் இளைஞர்களின் அரசியல் நோக்கும் பெரிய வர்களின் மரபு சார்ந்த அரசியல் ஆதரவும் மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.
அதாவது இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பெரியவர்கள் மரபு பற்றிச் சிந்திக்கின்றனர்.
இந்த எதிர்மறைப்பட்ட சூழ்நிலையில் எங் கள் இலக்கு என்பது அடிபட்டுப் போவதாக உள்ளது.

எனவே இது விடயத்தில் நம் இளைஞர் சமூ கம் அரசியல் பிரசாரகர்களாக மாற வேண்டும்.
இத்தகையதோர் மாற்றம் அரசியலை அறி வார்ந்தமாக உள்ளீர்ப்பதன் மூலமே சாத்திய மாகும் என்பதால் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத் தில் இன்று இடம்பெறும் கருத்தரங்கில் அனை வரும் கலந்து கொள்வது காலத்தின் கட்டாய தேவையாகும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila