தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா னது ஒற்றையாட்சி அடிப்படையி லான தீர்வுக்கு ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியுடன் ஏற்கனவே ஒப்பந் தம் ஒன்றைச் செய்துள்ளதாக அதி ர்ச்சி தகவலொன்றை வெளியிட்டு ள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமி ழ்த் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபை முதன்மை வேட்பா ளரும் சட்டத்தரணியுமான மணி வண்ணன், அது தொடர்பான விட யத்தை ஐக்கிய தேசியக் கட்சியானது 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட பிரேரணை ஒன்றில் வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.யிட்ட பிரேரணை ஒன்றில் வெளிப்படுத்தி யிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சி களையும் நிராகரிக்கவேண்டும் எனவும் இவ் உள்@ராட்சித் தேர்தலில் ஒற்றையா ட்சியை நிராகரிக்கின்ற ஆணையாக தமக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதா வது,
ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படை யிலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு காண ப்படுவதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என அக் கட்சியின் தலைவர் தெரி வித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இவ் உடன்படிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார வரைபை முன்மொழிந்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் ஒரு தீர்வை நோக்கி பயணிக்கவேண்டும் என்ற நிலையிலேயே அவர்களது நிலைப்பாடு இருந்தது. இவ்வா றான நிலையில் அவ் ஒஸ்லோ உடன்படிக் கையின் அடிப்படையிலேயே தீர்வு என்று கூட் டமைப்பானது தெரிவித்திருக்கின்ற நிலை யில் உண்மையில் கூட்டமைப்பானது ஒற்றை ஆட்சிக்கு இணங்கி விட்டது என்பது எமது நிலைப்பாடு அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.