அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைமை செய்து வரும் தேர்தல் பிரசாரம் கண்டு நெஞ்சு வெடித்து விடும் போல் இருக்கிறது.
அந்தளவுக்கு படுபாதகமான பொய்களை அவர்கள் அடுக்கி வருகின்றனர். அதிலும் காளியம்மன் மீது அளவு கடந்த பக்தி கொண்ட, அரசியலில் முதிர்வுமிக்க கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் கூறுவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் ஏன்தான் இப்படிச் சொல்லுகிறார் என்று எண்ணத் தோன்றும்.
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும்.
ஒற்றையாட்சியை ஏற்க மாட்டோம்.
ஒஸ்லோ உடன்பாடே கூட்டமைப்பின் இலக்கு அதனை நோக்கியே நகர்கின்றோம்.
என இரா.சம்பந்தர் கூறிய அத்தனை விட யங்களும் பச்சைப் பொய் என்பது நிறுதிட்ட மான உண்மை.
இதை நாம் கூறுவது சம்பந்தர் ஐயா மீது கோபம் கொண்டல்ல. மாறாக கண்ணுக்கு முன்னாக இப்படிப் படுபொய் சொல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப் பது பாவம் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தர் கூறுகின்ற பொய்யான தகவல்களை இவ் விடத்தில் நாங்கள் சுட்டிக் காட்ட வேண்டிய தாகவுள்ளது.
இடைக்கால வரைபு வெளிவந்திருக்கும் நிலையில், அதனைத் தயாரிப்பதில் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திர னின் வகிபங்கும் உள்ளது என்ற அடிப்படை யில், இடைக்கால வரைபில் உள்ளவற்றை விப ரித்துக் கூறுவதுதான் கூட்டமைப்புக்கு அழகு.
இடைக்கால வரைபு வெளிவந்தபோது, அதில் எல்லாம் இருக்கிறது என்று கூறிய கூட்டமைப்பினர், இடைக்கால வரைபில் எல் லாம் எங்கே? இருக்கிறது என்பதை விளக்கி இடைக்கால வரைபை நியாயப்படுத்தியிருந் தால் அதில் நேர்மைத்தனம் உள்ளது என்று கூறலாம்.
இதைவிடுத்து நல்லாட்சியின் ஆயுளுக்கு ஆபத்து வந்துவிட்டது. இடைக்கால வரைபு அரங்கேறப் போவதில்லை. எனவே உள்ளூ ராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கைப் பெறுவதற்காக,
ஒற்றையாட்சியை ஏற்கமாட்டோம்.
வடக்கு கிழக்கு இணைய வேண்டும். ஒஸ்லோ தீர்மானத்தின்படிதான் எங்களின் நகர்வு இருக்கிறது என்று கூறினால்,
ஐயா, போரில் அகப்பட்டு எல்லாம் இழந்த தமிழ் மக்களை ஏமாற்றுகிறீர்களா? இது உங் களுக்கே நியாயமா? என்று உங்கள் மனச் சாட்சியைத் தொட்டுக் கேளுங்கள்.
ஒற்றையாட்சி என்ற பேச்சுக்கே இட மில்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என மிகத் தெளிவாகக் கூறுகின்ற இடைக் கால வரைபை ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இன்று எல்லாவற் றையும் புரட்டுகிறார்.
இதைப் பார்க்கும்போது இறைவா! ஈழத் தமிழனாகப் பிறந்த இப்பிறப்பு போதுமடா என்று பிரார்த்திப்பதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்.
எதுஎவ்வாறாயினும் தமிழ் மக்கள் மிகவும் நிதானமாகச் சிந்தித்து வாக்களித்தால் திருத் தம் ஏற்படுவதற்கு நிச்சயம் வாய்ப்புண்டு.