பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் என்றவகையில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4ஆம் திகதி லண்டன் நகரிலுள்ள தூதுரக உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ, தமிழர்களின் கழுத்தினை அறுக்கப் போவதாக மிரட்டியிருந்தார்.
இதனையடுத்து பிரியங்கர பெர்ணான்டோவை பணி நீக்கம் செய்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிரியங்கர பெர்ணான்டோவின் பணி நீக்கத்தை தடுத்த மைத்திரி, அவரை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் கொண்டுள்ள கொள்கைகள் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவின் மக்கள் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு அடக்குமுறையை முன்னெடுத்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை தமிழர்களை அச்சுறுத்திய பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக நாடு கடத்துமாறு பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.