கிறீஸ் மனிதன் திருவிளையாட்டு கோட்டபாய ராஜபக்ஷ - அமைச்சர் தயா கமகே!

கிறீஸ் மனிதன் தாக்குதல் யாவும் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையா டல் என அமைச்சர் தயா கமகே விவரித்துள்ளார். 
கடந்த ஆட்சியில் கிறீஸ் மனிதனை உருவாக்கி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்ச த்தை ஏற்படுதினார்கள். கிறீஸ் மனி தனை பிடித்து பொலிஸில் கொடு த்தால் இராணுவத்தினர் வந்து அவ ர்கள் மனநோயாளிகள் என அழை த்துச் சென்றார்கள்.

இது அனைத்துமே கோட்டாபாய ரஜபக்ஷவின் திருவிளையாடல் என சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். மட்டக்களப்பு ஏறாவூர்ப்ப ற்று பிரதேச சபைக்கு தளவாய் வட்டாரத்தில் போட்டியிடும் கணபதிப்பிள்ளை மோகனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (06) மாலை செங்கலடி ரமேஸ்புர த்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டனர். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "உங்களது பிரதேசங்க ளில் பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் அதிகம் காணப்படுகிறார்கள்.

30 ஆண்டுகள் நீங்கள் மிகவும் துயரப்பட்டீர்கள். கடந்த கால ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷ எம்மையும், எமது குழந்தைகளையும், பிறக்கவிருக்கும் குழந்தைகளையும் கடனாளியாக்கிவிட்டு சென்றுள்ளார். ஹம்பாந்தோட்டை சூரியவௌ கிரிக்கெட் மைதானம், துறைமுகம், கட்டுநாயக்க அதிவேக நெடு ஞ்சேலை அனைத்து இடங்களும் கடனுடன் தான் உள்ளது.

இதிலே அரைவாசியை நாசம் செய்து மிகுதியை கொள்ளையடித்துள்ளார்கள. இவர்கள் கொள்ளையடித்த நிதியை நாங்களும் நீங்களும் இணைந்து வட்டியு டன் கட்ட வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடை பெற்ற போது துப்பாகியால் சுட்டு கொலை செய்தார்கள்.

குடி நீருக்காக போராடிய மக்களை வெடிவைத்து துரத்துமாறு கோட்டாபாய ராஜபக்ஷ உத்தரவிட்டார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டார், பிரதீப் எக்னலிகொட காணாமல் போனார்.

ரக்பி வீரர் தாஜூடீன் கொலை செய்யப்பட்டார். செங்கலடி பிரதேசத்தைப் பொறுத்தவரை தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான இடங்கள் உள்ள போதிலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பிரதி நிதிகள் இல்லை. இந்த பிரதேசம் கால் நடை வளர்ப்புக்கு உகந்ததாக காணப்படுகிறது.

எனது அமைச்சின் ஊடக செங்கலடியிலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு பசு மாடுகள் வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும். தமிழ் சமுதாயம் பசுக்களை பால் பெறுவதற்காகவே வளர்க்கின்றனர். இறை ச்சியை சாப்பிடுவதற்கு அல்ல என்பது எமக்கு தெரியும்.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஆறு பசுக்களை வழங்க நினைத்திருக்கின்றோம். இதனுடாக ஐந்து இலட்சத்துக்கு மேல் வருமானம் பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கு நல்ல வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் பொருளா தாரத்தை முன்னேற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்." என தெரிவித்து ள்ளார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila