ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!

TNA
வாக்காளப் பெருமக்களே!
வக்காளத்து அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!
நாக்காள நல்லாய் பேசுபவர்களும் இவர்களே!
நல்லதாய் ஏதும் செய்துள்ளனரோ?
ஞாபகப்படுத்துங்கள்!
இல்லையேல்!
நாளை எங்களுக்குப் பன்னாங்கு கட்டப் போபவர்களும் இவர்களே!
வாக்குச் “சாவடி” என்றுதானே கூறுகிறார்கள்!
இதன் மேலும் என்ன யோசனை?
இங்கும் “மெளனிக்கப்பட்ட” மெளனம் மருந்தாகிறது!
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!
போலிகளை,
பித்தலாட்டக்காரர்களை,
துரோகத்தில் தோய்ந்தவர்களை,
நம்பிக்கை கொன்றவர்களை,
மோசடிகளின் ஒட்டுமொத்த உருவமானவர்களை,
தீர்வு என்று கூறித் தம் தீரும் ஆயுளைக் கடக்க முயல்வோரை,
வாய்வீணர்களை………
ஓம்……… இன்றும்
இங்கும் “மெளனிக்கப்பட்ட” மெளனம் மருந்தாகிறது!
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!
வாக்குச்சாவடி நாடுங்கள்!
வாக்காளப் பெருமக்களே!
வக்காளத்து அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!
நாக்காள நல்லாய் பேசுபவர்களும் இவர்களே!
நல்லதாய் ஏதும் செய்துள்ளனரோ? ஞாபகப்படுத்துங்கள்!
இல்லையேல்!
நாளை எங்களுக்குப் பன்னாங்கு கட்டப் போபவர்களும் இவர்களே!
வாக்குச் “சாவடி” என்றுதானே கூறுகிறார்கள்!
இதன் மேலும் என்ன யோசனை?
இங்கும் “மெளனிக்கப்பட்ட” மெளனம் மருந்தாகிறது!
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!
வாக்குக்கு உறுதியளித்ததை வந்ததும் “கணிப்பு” என்போரை,
மகளுக்கு மை3க் ‘கேக்’!
தமிழ் மக்களுக்கோ “ஆயுதப்போராட்டம் இன்னும் ஓயவில்லை” என்போரை,
கோடிகள் வாங்கவில்லை எனும் கேடிகளை,
போராளிகளை நட்டாற்றில் கைவிட்டுப் பொம்மைத் துப்பாகி நடனக்காரரை
மேடையேற்றி பொய்முகங்காட்டுவோரை,
(ஓ! இவர்கள் கட்டியிருந்த துவாய் துண்டும் நாளை உருவப்படும் என்பது வேறுகதை)
ஜனநாயகம்……!
மென்வலு அழுத்தம்……!
என வாய்கிழியப் பேசிய……
கட்சிக்குள் ஜனநாயக விரோதம்,
வன்சொற்ச் சர்வாதிகாரம்,
பாராளுமன்றில் தம் கட்சி உறுப்பிரையே உரையாற்றத் தடையை
அதுவும் சபாநாயகர் ஊடாக நடைமுறைப்படுத்தியோரை……
ஓம்……… இன்றும்
இங்கும் “மெளனிக்கப்பட்ட” மெளனம் மருந்தாகிறது!
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!
சாவடி நாடுங்கள்!
வாக்காளப் பெருமக்களே!
வக்காளத்து அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!
நாக்காள நல்லாய் பேசுபவர்களும் இவர்களே!
நல்லதாய் ஏதும் செய்துள்ளனரோ? ஞாபகப்படுத்துங்கள்!
இல்லையேல்!
நாளை எங்களுக்குப் பன்னாங்கு கட்டப் போபவர்களும் இவர்களே!
வாக்குச் “சாவடி” என்றுதானே கூறுகிறார்கள்!
இதன் மேலும் என்ன யோசனை?
இங்கும் “மெளனிக்கப்பட்ட” மெளனம் மருந்தாகிறது!
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!
சிங்கள தேசத்தில் “புலிகள் பயங்கரவாதிகள்…….
மகிந்த எம் தேசியத் தலைவர்……..
புலிகள் என்னைத் கூட்டமைப்பின் தலைவராக்கவில்லை……..
புலிகளின் கொலைப்பட்டியலில் என் பெயரே முதலாவது………..
புலிகள் தோற்கடிக்கப்பட்டதாலேயே தான் தன் திருமலை வீட்டுக்கு
நிம்மதியாக பயணிக்க முடிகின்றது”……
என்ற அந்திம அரட்டையனைத் தலைமயாகக் கொண்டவர்களை……
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!
சாவடி நாடுங்கள்!
உங்கள் வாக்குகளால் சாவடியுங்கள்!
வாக்காளப் பெருமக்களே!
வக்காளத்து அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!
நாக்காள நல்லாய் பேசுபவர்களும் இவர்களே!
நல்லதாய் ஏதும் செய்துள்ளனரோ? ஞாபகப்படுத்துங்கள்!
இல்லையேல்!
நாளை எங்களுக்குப் பன்னாங்கு கட்டப் போபவர்களும் இவர்களே!
வாக்குச் “சாவடி” என்றுதானே கூறுகிறார்கள்!
இதன் மேலும் என்ன யோசனை?
இங்கும் “மெளனிக்கப்பட்ட” மெளனம் மருந்தாகிறது!
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!
சிங்க கொடியாட்டலும்……
அவன் சுதந்திர தினத்தில் கூடிக் கும்மாளமிடுதலும்……
தேர்தல் வந்தால் தம் முத்திரைத் தலைப்பில் முகம் மறைத்தலும்……
எமக்கு நித்திய வியாதியாக இருக்க வேண்டுமா?
பொங்கு தமிழுக்கு மூன்று அடுப்புக் கல் வையுங்கள்!
மூளும் தீ பகை எரிக்கும் வாழ்வு தரும்!
இங்கும் “மெளனிக்கப்பட்ட” மெளனம் மருந்தாகிறது!
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்
சாவடி நாடுங்கள்!
உங்கள் வாக்குகளால் சாவடியுங்கள்!
இவர்களை ஜனநாயகத்தில் சாவடியுங்கள்!
நாளை எங்கள் நாவுகளால் இவர்சாகளைச்
சாவடிக்கச் சந்தர்பம் வழங்காமல்
ஜனநாயகத்தில் “சாவடி”க்கத் தயாராகுங்கள்!
சாவடி நாடுங்கள்!
இங்கும் “மெளனிக்கப்பட்ட” மெளனம் மருந்தாகிறது!
சாவடியில் வீழும் வாக்குகள்
இவர்களுக்கான வாய்க்கரிசியாகட்டும்!
சாவடி நாடு! சரமாரியாய்ப் போடு!
போய்த் தொலையட்டும் போலிகள்!
வீட்டைவிட்டு இடம் பெயர்வது இங்கு எவனுக்குத் முதல் தடவையல்லவே!
எம் புறநானூறு தந்த பாடம் என்ன?
வீட்டை விட்டுப் போக வேண்டும் என்றால் போய்விடு!
மீள வரும்போது நாம் விட்டுப்போகும் போது இருந்த மாதிரி இருந்தால் சந்தோசம்!
இல்லை என்றால் மீளக் கட்டி வாழ்வோம்!
இப்படித்தானே…………
இழப்புக்களின் ஊடே எம் இருப்புக்கள் இதுவரை தக்க வைக்கப்பட்டுள்ளது!
தக்க முடிவு எடுப்பீர்காள்!
தகுந்த பாடம் புகட்டுவீர்காள்!
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
-: சீராளன் :-
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila