1983ல் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் தானே? அது தான் இன்று எங்களுக்கு நடக்கின்றது என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கண்டி, அக்குறனையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து அக்குறனை, 8ம் கட்டையிலுள்ள முஸ்லிம் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”அக்குறனைப் பிரதான சந்தியில் உள்ள கடைத் தொகுதித் தொடர் நெருப்பூட்டபட்டதை ஆயுதம் தரத்தவர்கள் பாரத்துக்கொண்டிருந்தனர்.
அதனையடுத்து சில முஸ்லிம் இளைஞர்கள் கற்களை வீசத் தொடங்கியதுடன் அவ்வாயுதம் தரித்தவர்கள் நெருப்பூட்டியவர்களை நோக்கி ” அவர்கள் தாக்குகின்றார்கள், நீங்களும் ஆயுதங்களை எடுத்து வாருங்கள்” என துவேசமூட்டுகின்றனர்.
இது தான இந்த நாட்டின் சட்டமும் ஒழுங்கும்? அன்று தமிழர்களுக்கு நடந்தது இன்று எமக்கு ஆரம்பித்துள்ளது என அக்குறனை 8ம் கட்டையைச் சேர்ந்த அப்துல் ஜபார் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.