தென் மாகாணத்தில் அரசியல்வாதியின் மனைவி அடாவடி!



தலங்கம பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றின் சாரதியை தாக்கிய தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கப் வண்டியில் பயணித்த தென் மாகாண சபை உறுப்பினரும் அவரது மனைவியும் சென்றுக்கொண்டிருந்த வேளை பேருந்து சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணத்தினாலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தென் மாகாணசபை உறுப்பினரும் அவரது மனைவியும் இணைந்து கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு குறித்த பேருந்து சாரதியை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை இனந்தெரியாத நபரொருவர், தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இதைதொடர்ந்து இருவரையும் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களின் துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர். இந்த துப்பாக்கியில் ஐந்து குண்டுகள் இருந்துள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila