மருதங்கேணி போராட்டத்தில் புலனாய்வாளர்கள் நடமாட்டம் கலந்து கொண்ட உறவுகள் அச்சம்

மருதங்கேணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போரா ட்டத்திற்கு தினமும் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலி ஸார் சென்று தகவல்களை திரட்டி வருவதாக போராட்ட த்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்உறவினர்கள் சிலர் நேற்றைய தினம் அச்சம் தெரிவித்துள்ளனர். 

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடைபெற்றது? என்ற கேள்விகளுடன் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கடந்த 364 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நேற்று 365 நாளை எட்டியிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்ற போது, நேற்றைய தினம் என்ன செய்ய போகின்றீர்கள்? யாருக்கு மகஜர் கையளிக்க போகின்றீர்கள்? என்பன தொடர்பான தகல்வல்களை திரட்டியுள்ளனர். 

இது தவிர குறித்த போராட்டத்தில் முன்னின்று செயற்படுத்தியவர்களின் தோலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்றைய போராட்டத்தின் போதும் அதிகளவான புலனாய்வு பிரிவினர் அங்கு குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இந்த பிரதேசம் ஏனைய இடங்களை விட தூர இடமாக காணப்படுவதால் இங்கு பாதுகாப்பு பிரவினரின் அச்சுறுத்தல் ஏனைய இடங்களை விட அதிகளவு காணப்படுகின்ற போதிலும், வெளி தெரிவதில்லை என நேற்று உரையாற்றியவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
ரின் உறவினர்கள் சிலர் நேற்றைய தினம் அச்சம் தெரிவித்துள்ளனர். 
இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? மற் றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோ ருக்கு என்ன நடைபெற்றது? என்ற கேள்வி களுடன் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கடந்த 364 நாட்களாக முன்னெடு க்கப்பட்டு வருகின்ற போராட்டம் நேற்று 365 நாளை எட்டியிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பிர தேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போரா ட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் ஏற்பாடுகள் நேற்று முன் தினம் நடைபெற்ற போது, நேற்றைய தினம் என்ன செய்ய போகின்றீர்கள்? யாருக்கு மக ஜர் கையளிக்க போகின்றீர்கள்? என்பன தொடர்பான தகவல்;களை திரட்டியுள்ளனர். 
இது தவிர குறித்த போராட்டத்தில் முன் னின்று செயற்படுத்தியவர்களின் தொலை பேசி இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக் கைகளிலும் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டி யுள்ளனர். நேற்றைய போராட்டத்தின் போதும் அதிகளவான புலனாய்வு பிரிவினர் அங்கு குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைக ளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இந்த பிரதேசம் ஏனைய இடங்களை விட தூர இடமாக காணப்படுவதால் இங்கு பாது காப்பு பிரிவினரின் அச்சுறுத்தல் ஏனைய இட ங்களை விட அதிகளவு காணப்படுகின்ற போதி லும், வெளியில் தெரிவதில்லை என நேற்று உரையாற்றியவர்கள் கூறியிருந்தமை குறி ப்பிடத்தக்கது.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila