காணாமல் ஆக்கப்பட்டுள்ள வணபிதாக்களான பிரான்சிஸ் யோசவ் அடிகளார் மற்றும் ஜம்பிறவுண் உள்ளிட்டவர்களிற்கு நீதி கோரி நடத்தப்படுகின்ற போராட்டத்தில் பங்கெடுக்காது துறவியர்கள் பலரும் பதுங்கிக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இன்றைய தினம் யாழ்.வருகை தந்த மைத்திரியிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.ஒரேயொரு மதகுரு தவிர வேறு எவரும் அப்போராட்ட களப்பக்கம் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை. ஓன்றில் அவர்கள் ஜனாதிபதி வருகையை புறக்கணித்திருக்கவேண்டும் அல்லது ஆயரை திருப்திப்படுத்த ஆயர் இல்ல கட்டடத்தினுள் பதுங்கியிருக்கவேண்டுமென போராட்டகாரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடந்த போது அதனை தடுத்து நிறுத்த இதே புனிதபத்திரிசிரியார் கல்லூரியின் முன்றலில் தொடர்போராட்டத்தை முன்nடுத்த துறவியர்கள் இன்றில்லை.ஒன்றில் அவர்கள் நல்லிணக்கத்தினுள் ஜக்கியமாகியிருக்கவேண்டும் அல்லது ஒதுங்கி போயிருக்கவேண்டுமெனவும் பேசிக்கொள்ளப்பட்டது.
இதனிடையே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உங்களால் முடியும் அதனை நீங்கள் செய்ய வேண்டும். அப்படியாக நீங்கள் அந்த கருமத்தினை நிறைவேற்றுகின்ற போது சர்வதேச அளவில் நீங்கள் போற்றப்படுவீர்களென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்;தாக சொல்லப்படுகின்றது.
தனது தள்ளாமையிலும் மைத்திரியை வரவேற்க வடக்கு முதலமைச்சர் மற்றும் மாவையுடன் யாழ்ப்பாணம் வந்து காத்திருந்த சம்பந்தர் தற்போதும் செத்துப்போய்விட்ட இடைக்கால வரைபினை கேட்டு மைத்திரியிடம் கோரிய போது அவர் அதனை துல்லியமாக கேட்டுச்சென்றதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்தது.