மன்னார் ஆயரை தொடர்ந்து யாழ்ப்பாண ஆயர் இல்லம் நல்லிணக்கத்திற்காக தனது கதவுகளை அகல திறந்துவிட்டுள்ளது.
புதிய யாழ்.ஆயரது அரசியல் வங்குரோத்து தனம் தொடர்பில் முன்னரே பல தடவைகள் சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரித்து வந்திருந்தனர்.
ஆனாலும் அதனை தாண்டி கச்சதீவில் தேவாலயத்தை கட்டி இனஅழிப்பு கடற்படையினருக்கு வெள்ளையடித்தது யாழ்.ஆயர் இல்லம் .அத்துடன் தமது நல்லிணக்கத்தின் உச்சமாக சிங்களத்தில் திருப்பலி பூஜையும் நடத்த தனது கட்டுப்பாட்டிலுள்ள கச்சதீவில் இவ்வாண்டினில் அனுமதியும் வழங்கியுள்ளது.
அதேபோன்று மதகுருமார் ஓய்வெடுக்க(? ) வளலாய் கடற்கரையில் புதிய விடுதியொன்றையும் கடற்படையின் உதவியுடன் அதே யாழ்.ஆயர் இல்லம் கட்டிமுடித்துள்ளது.
ஆனால் இதே கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா ஜிம்பிறவுண் பற்றி வாய்திறக்க ஆயருக்கு முடியாமலருக்கின்றது.
இந்நிலையில் ஆயர் இல்லத்தின் நேரடி நிர்வாகத்திலுள்ள யாழ்.புனித பத்திரிசிரியார் கல்லூரிக்கு மைத்திரியை வரவழைத்து தலைவாழையிலை விருந்து வைக்க தற்போது தயாராகியுள்ளது.
இப்பாடசாலையின் முன்னாள் அதிபரும் வெள்ளைக்கொடி இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களிற்கு தலைமை தாங்கி சென்றவருமான பிரான்ஸிஸ் அடிகளார் பற்றி வாய் திறக்க புதிய ஆயர் தயாராக இல்லை.ஆனால் அந்த யுத்தத்தின் இறுதியில் தலைமை தாங்கிய, போர்க்குற்றவாளிகளை சர்வதேசத்திடமிருந்து பாதுகாக்கின்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை வரவழைத்து கைகுலுக்கிக்கொள்ள ஆயர் இல்லம் தற்போது தயாராகிவருகின்றது.