ஒரு சொட்டு மழை நீரையேனும் கடலில் கலக்க விடலாகாது என்று கூறியவர் பராக் கிரமபாகு மன்னன்.
குளங்களை அமைத்து விவசாய உற்பத்தி யைப் பெருக்கி மனித குலமும் மனித குலத்தை நம்பி இருக்கும் ஜீவராசிகளும் வாழவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே மேற் போந்த கருத்தை பராக்கிரமபாகு மன்னன் கூறினார் என்று பொருள் கொள்ளல் வேண்டும்.
மழை நீரைச் சேமித்து வைப்பதில் தென் பகுதியின் கட்டுமானம் சிறப்புடையது எனலாம்.
குளங்களின் எண்ணிக்கையும் ஆற்று நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் நுட்பமும் தென்பகுதியில் வருடம் முழுவதும் நெல் வேளா ண்மையும் விவசாயச் செய்கையும் மேற்கொள் ளப்படுவதற்கு வழிவிட்டுக் கொடுக்கிறது.
ஆனால் எங்கள் நிலைமை அதுவன்று. ஐயா! வட புலத்தில் நெல் விதைத்து அதை அறுவடை செய்து விளைந்த நெல்லை வீட்டுக் குக் கொண்டு வருவது வரையில் ஏற்பட்ட செல வைக் கணக்கிட்டால்,
அரிசி வாங்கி சமைப்பது இலாபம் என்று கண்டறிய முடியும்.
ஆக, வடபுலத்து விவசாயம் என்பது ஒட்டு மொத்தத்தில் நட்டத்திலேயே நடந்து முடிகிறது.
வெறும் பாடு என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியவில்லை.
இதற்குக் காரணம் மழையை நம்பி பயிர் செய்யும் எங்கள் தலைவிதிதான்.
மழை பிந்திவிட்டால் அல்லது முந்திவிட்டால் தேவைக்குக் குறைந்து விட்டால் அல்லது கூடி விட்டால் வேளாண்மைப் பாதிப்பு என்பதே நம் நிலைமை.
இவ்வாறான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டுமாயின் மழை நீரைச் சேமித்து வைத்து அந்நீரை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்து கின்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும்.
இதனைச் செய்வதற்கு ஏலவே இருக்கின்ற குளங்களை விஸ்தரிப்பது; புதிய குளங்களை நிர்மாணிப்பது; குளங்களை பராமரிப்பது; உரிய வாய்க்கால் வசதிகளைச் செய்து கொடுப் பது என்ற செயற்பாடுகள் ஒரு செயல் ஒழுங் கில் நடந்தாக வேண்டும்.
ஆனால் இதுபற்றிய சிந்தனை நம்மிடம் இல்லை என்றே கூறவேண்டும்.
எங்கள் முன்னோர்கள் அமைத்த குளங் களை கடன்கழிப்புக்காகத் திருத்தும் பணியைத் தவிர வேறு எதுவும் நடப்பதாகத் தெரிய வில்லை.
மழை நீரை கடலில் கலக்கவிடாமல் அதனை சேமித்து வைக்கும் திட்டம் இல்லாத வரை எங் கள் மண்ணில் நன்னீர்த் தட்டுப்பாடு இருக் கவே செய்யும்.
இது ஒருபுறம் இருக்க, மழைநீரை கடலில் கலக்கவிட்டு, நன்னீருக்காக கடல் நீரைச் சுத்திகரிப்புச் செய்கின்ற ஒரு சிந்தனையும் நம்மிடம் ஓடித் திரிகிறது எனும்போது,
மரத்தின் கொம்பில் இருந்து கொண்டு அதன் அடிப்பகுதியை வெட்டிய கதையே ஞாப கத்துக்கு வருகிறது.
என்ன செய்வது! எல்லாம் எங்கள் தலைவிதி.