
இந்தியாவில் மத்திய, மாநிலங்களில் அரச வேலையில் சேர விரும்பும் நபர்கள் ஐந்தாண்டு ராணுவத்தில் கட்டாயம் சேவையாற்றி இருக்க வேண்டும் என பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை தயார் செய்யுமாறு பாராளுமன்ற நிலைக்குழு மத்திய பணியாளர் பயிற்சித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.
முதலில் பாதுகாப்பு அமைச்சிடம் இதற்கான பரிந்துரை அளிக்க கேட்டபோதும் அதில் திருப்தி இல்லாததால் தற்போது மத்திய பணியாளர் பயிற்சித்துறையிடம் பாராளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது