காணாமல் ஆக்கப்படுவோர் தொடர்பான சட்டம் நிறைவேறியதாக அறிவிக்க வேண்டாம்: இந்துராகரே தம்மரத்ன தேரர்
பலவந்தமாக காணாமல் போக செய்வதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதாக உறுதிப்படுத்த வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதாக பொதுஜன அரச சபையின் தலைவர் இந்துராகரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பில் சமூகத்தில் பேசப்பட்டு வருவதுடன் தெற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதனால், சட்டமூலம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, சட்டமூலத்தில் கையெழுத்திடுவதை சபாநாயகர் தவிர்க்க வேண்டும். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாள் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இருள் சூழ்ந்த துக்க தினமாக கருதப்படும்.
இலங்கை அரசை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினர் இந்த சட்டமூலத்தின் ஊடாக பலவீனப்படுத்தப்படுவார்கள். அரசாங்கம் ஒன்று நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சபாநாயகர் காரணகர்த்தாவாக செயற்படக் கூடாது எனவும் தம்மரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comments