புலிகளின் அணி மிகவும் ஒழுக்கமானது: இந்தியப் படை அதிகாரி!தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் தமக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லையென இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார். 

1987-89 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் 9 பேரை கொண்ட குழு அண்மையில் இலங்கை சென்று திரு ம்பியது. 

அப்போது இந்திய அமைதிப் படை முகாமிட்டிருந்த வடக்கு பகுதிகளு க்கும் அக்குழு சென்று பல்வேறு இடங்களைப் பார்வையிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைதிப் படை முன்னாள் அதிகாரியான உன்னி கார்தா கூறியதாவது, அமைதிப் படை காலத்தில் விமானத்தில் இலங்கைக்கு அடிக்கடி பயணித்தேன். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக ஒழுக்கமானவர்கள் என்பதை வெளி ப்படுத்த ஒருபோதும் தயங்கமாட்டேன். திருவனந்தபுரம், சூலூர் விமானப் படைத் தளங்களில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்துக்கு பயணி த்திருக்கிறேன். வடக்கு பகுதி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வீசிய ஆப ரேஷன் பூமாலையும் நினைவில் உள்ளது. 

இவ்வாறாக உன்னி கார்தா தெரிவித்துள்ளாா். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila