கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிவான் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
|
இந்த மாதம் 23 ஆம் திகதி அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இரு தடவைகள் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்கு ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்த போதும், அவர் வருகை தரவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
இதனால், சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க, ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிமன்றத்திடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியது. இந்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதிவான் நீதிமன்றம், ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜர்படுத்துமாறு உத்தரவை பிறப்பித்துள்ளது.
|
ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை சிஐடி முன் நிறுத்துமாறு கடற்படைக்கு நீதிவான் உத்தரவு!
Add Comments