இரணைதீவு மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியேற அனுமதி


இரணைதீவில் மக்கள்  தங்களின் பூர்வீ கமான சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவ தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என  மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவி ருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ்  அறிவித் துள்ளார் 

நேற்று இரணைதீவுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜ பக்ஷ, கடற்படை தளபதி  ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழு வினர்  இரணைதீவுக்கு விஜயம் செய்தனர்.  இவர்களுடன்  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிர தேச செயலாளர் கிருஸ்னேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகி யோரும் சென்றிருந்தனர்.

அங்கு  சென்ற மேற்படி குழுவினர்   பொது மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர்கள்  தங்களின் சொந்த நிலத்தில் குடிய மர்வதற்கான அறிவிப்பையும் வெளியிட்டனர்.

ஏற்கெனவே மக்களின் காணிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனடிப் படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்ப டுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரணைதீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பா ர்கள் என்றும்  இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதை  பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு என்பவ ற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கி ருப்பார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை இரணைதீவு மக்களுக் கான அடிப்படை தேவைகளை  மாவட்டச் செயலகம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது என கிளிநொச்சி மாவ ட்ட அரச அதிபர் குறி ப்பிட்டார்.   
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila