முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்து ஐயன்கட்டுப்பகுதியில் மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் ஒருவன் உயி ரிழந்துள்ளார்.
நேற்று மாலை 3.00 மணியளவில் முத்துஐயன்கட்டு ஜீவநகர் அம்மன் கோவில் பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக் கும் மாணவனான 14 அகவையுடைய பி.தினேஸ்குமார் என்ற மாணவன் முத்துஐயன் கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க்கல வன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்துள்ளான்.
பாட சாலை முடிந்து வீடு திரும்பிய மாணவன் உணவு உண்பதற் காக சமையல் அறையில் உணவு தட்டில் உணவினை எடுத்துக் கொண்டு நின்ற வேளை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மயங்கி நிலத்தில் வீழ்ந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளான்
சம்பவம் அறிந்த அயலவர் களின் உதவியுடன் ஒட்டுசுட் டான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச் சைக்காக மாஞ்சோலை மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டுள் ளார். அங்கு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித் துள்ளனர்.
குறித்த மாணவனின் தந்தை போரின் போதுஉயிரிழந்துள் ளதுடன் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வந்த மாணவனுக்கு அண்மையில் பாடசாலை நிர் வாகத்தின் உதவியுடன் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முத்துஐயன்கட்டு ஜீவநகர் பகுதியில் மின்னல் தாக்கம் அதி கரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்தபகுதியில் ஏத் கோபுரம் இல்லாமையினால் கோடைகாலங்களில் இவ்வாறான மின்னல் தாக்கங் கள் பதிவாகிவந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரி வித்துள்ளார்கள்.