ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்பை ஓரங்கட்டியது ஏன்?


வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக் கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட சிறப்புச் செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை என்ற விவகாரம் கூட்ட மைப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபி விருத்திக்கென சிறப்புச் செயலணி ஒன்று அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவால் அமைக்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்ரன் அவர்கள் இணைத்துக் கொள் ளப்பட்டுள்ளார்.
இருந்தும் வடக்கு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பைச் சேர்ந்த வர் என்பதை கூட்டமைப்பினர் அடிக்கடி மறந்து விடுகின்றனர்.
ஜனாதிபதி அமைத்த விசேட செயலணியில் கூட்டமைப்பினருக்கு இடம் வழங்கப்படவில்லை என அந்தக் கட்சியினர் ஜனாதிபதியிடமோ அன்றி வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமோ முறை யிட முடியாது.

அவ்வாறு முறையிட்டால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயலணியில் உள்வாங்கப் பட்டுள்ளார். அவர் கூட்டமைப்பைச் சேர்ந்த வரல்லவா.

அவ்வாறாயின் கூட்டமைப்பின் உறுப்பினர் கள் எவரையும் செயலணியில் உள்ளீர்க்க வில்லை என்று எங்ஙனம் நீங்கள் கூறமுடியும் என மறுப்புக் கேள்வி கேட்கப்படும்.
எனவே கூட்டமைப்பில் இருந்து எவரையும் சிறப்புச் செயலணிக்குச் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு அடிபட்டுப் போகும் என்பது வேறு கதை.

இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதியின் சிறப் புச் செயலணியில் கூட்டமைப்பின் உறுப்பினர் கள் சிலரை மேலதிகமாகச் சேர்ப்பது ஏன் தவிர்க்கப்பட்டது என்று ஆராயும்போது, அதற்கு கூட்டமைப்பு விட்ட முழுத் தவறே காரணம் என்று அடித்துக் கூறமுடியும்.
இதைக்கூறுவதனூடு கூட்டமைப்பைக் குறை கூறி, ஜனாதிபதியை நிறைவு காண்பதாக யாரும் கருதிவிடாதீர்கள்.

மாறாக நல்லாட்சிக்கு ஆதரவு வழங்குதல் என்று தீர்மானித்த கூட்டமைப்பினர் - ஜனாதி பதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்ட கூட்ட மைப்பினர், எதற்காக ஜனாதிபதி மைத்திரியின் உறவை வெட்டிவிட்டு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் மட்டும் உறவைப் பேணிக்கொண்ட னர் என்பதுதான் இங்கு எழும் முக்கிய கேள்வி யாகும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுதான் இலக்கு என்றால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஒரு சமத்துவமான உறவை கூட்டமைப்பு பேணியிருக்க வேண்டும்.
ஆனால் கூட்டமைப்பினர் அவ்வாறு செய் யாமல் ஜனாதிபதி மைத்திரியை ஓரங்கட்டு வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதே தமக்கு நம்பிக்கை என்பதுபோலவும் நடந்து கொண்டபோது,

கூட்டமைப்புக்கு ஜனாதிபதியிடம் இருந்து மதிப்பு மரியாதை கிடைக்கும் என எதிர்பார்ப்பது மடமைத்தனமானதே.
தவிர, அரசாங்கத்தால் தலா இரண்டு கோடி ரூபாய் பணம் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது என கூட்ட மைப்பின் எம்.பி கூறியிருக்கையில், கூட்ட மைப்பின் நேர்மைத்தன்மையில் ஜனாதிபதிக்கு ஐயம் எழுவது நியாயமானதே.
ஆக, கூட்டமைப்பினர் தமது நேர்மைத் தனத்தை இழந்து போனதும் செயலணியில் அவர்கள் இடம்பெறாமல் போனமைக்குரிய காரணம் என்று கூறுவதில் தவறிருக்க முடியாது.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila