வவுனியாவில் தமிழர்களின் வளங்கள் பறிபோகும் அபாயம்

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் விசாலமாக 800 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீர் தேக்கமும், அதனை சுற்றியுள்ள வளங்களும் தமிழர்களிடமிருந்து பறிபோகவுள்ளதாக குறித்த நீர்த்தேக்கத்தினை சுற்றியுள்ள கிராமவாசிகள் அச்சம் கொள்கின்றனர்.
சுமார் 8 கிராமங்களில் உள்ள மக்களின் விளை நிலங்களும் வயல் காணிகளையும் உள்ளடக்கி அதற்கு மாற்றீடாக வேறு காணிகள் வழங்கப்பட்டே அரசினால் குறித்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
வவுனியா மக்களின் எதிர்கால மற்றும் தற்போதைய குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நீர்த்தேக்கம் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு பின்பே நீர்வளங்கள் அதிகாரசபையிடம் ஒப்பந்தகாரர்களால் கையளிக்கப்படவுள்ளது.
எனினும் குறித்த நீர்த்தேக்கத்தில் சூடுவந்தபுலவு, காக்கையன்குளம், பாவற்குளம் பகுதியில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் அத்துமீறி மீன் பிடித்து வருவதாகவும் அதற்கு நீர்வளங்கள் அதிகாரசபையின் உயரதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து வருவதுடன் கிராம மக்களை அலட்சியப்படுத்தும் முகமாக நடந்து கொள்வதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த நீர்த்தேக்கத்தினை சுற்றிலும் காடுகள் உள்ளதனால் குறித்த நபர்களை நாம் கிராமத்திற்குள் உள்நுழைய விடும் பட்சத்தில் எதிர்காலத்தில் குடியேற்றங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை அமைத்து கொண்டு இஸ்லாமியர்கள் குடியேறிவிடுவார்கள்.
இதனால் குறித்த நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள மக்கள் தமது வளங்களை பறிகொடுத்துவிட்டு நடுவீதியில் தான் நிற்கவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுவோம் என கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றதுடன் குறித்த நீர்வளங்கள் அதிகாரசபையின் அதிகாரி என்பவரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்(நீர்வளங்கள் அதிகாரசபையின் அமைச்சர் ரவூப்ஹக்கீம் என்பதும் குறிப்பிடத்தக்கது) என்றும், இதனாலேயே அவர் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறார் எனவும் தெரிவித்த கிராமவாசிகள் இதன் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பின்புலமும் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் குறித்த நபர்கள் கிராமத்தினுள் வரும்போது தனியார் கல்வி நிலையங்களுக்கு வகுப்பிற்கு சென்றுவரும் பெண்பிள்ளைகளுடன் சேஷ்டை விடுவதாகவும் ஓரிரு தடவைகள் கிராமவாசிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டும் உள்ளார்கள் என்றும் குறித்த அத்துமீறிய மீன் பிடித்தல் தொடர்பாக 2016ம் ஆண்டளவில் தரணிக்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிப்பதுடன், குறித்த நீர்த்தேக்கமானது நீர்வளங்கள் அதிகாரசபையின் கீழ் வழங்கப்பட்டபின்பு மீன் பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டால் குறித்த நீர்தேக்கத்தினை சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடமாகாணசபையின் சுற்றுலாத்துறை அமைச்சானது முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் கீழ் காணப்படுவதால் குறித்த நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு தினமும் மக்கள் குறித்த பகுதியிற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் அந்த பிரதேசத்தை சுற்றுலா பகுதியாக அறிவித்து குறித்த பகுதியில் சிற்றுண்டிச்சாலை சிறுவர் பூங்காக்கள் அமைத்து கிராமத்து சனசமூக நிலையத்தினூடாக நிர்வகிப்பதன் மூலமோ அல்லது தங்களின் கீழோ நிர்வகிப்பு செய்யப்படுமாயின் குறித்த பகுதியில் அத்துமீறிய செயற்பாடுகளை தடுக்க முடியும் என்பதுடன் கிராமவாசிகளுக்கும் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் முடியும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.




Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila