அமைச்சர் விஜயகலா தமிழர் என்பதால்...

விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் கூறியதை தூக்கிப் பிடித்து அவரை ஓர் இனவாதி போல சிங்களப் பேரின வாதிகள் காட்டி நிற்கின்றனர்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என அமைச்சர் விஜயகலா கூறியதை சிங் களத் தரப்புகள் பெரிதுபடுத்தி பாராளுமன்றத் தில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்கள் எழுந் ததும் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அதிரடியாக அமைச்சர் திருமதி விஜய கலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஒரு தமிழன் தேசிய கட்சியில் இருந்தாலும் அவன் கதைத்தால் தங்களுக்கு ஆதரவாகக் கதைக்க வேண்டும். இல்லையேல் கதைக்கா மல் இருக்க வேண்டும்.

மாறாக தமிழ் மக்களின் சமகால நிலைப் பாட்டை எடுத்துக் கூறினால் அவர் பதவி துறக்க வேண்டும் என்பதுதான் சிங்களத் தரப்பின் முடிவு என்பது இப்போது வெளிப்படையாகிவிட்டது.

விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ் வரன் கூறிய சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பார்ப் பதுதான் ஆட்சியாளர்களுக்கும் கூக்குரல் போடுவோருக்கும் அழகு.

இதைவிடுத்து எடுத்த எடுப்பில் அவரைப் பதவி விலகக் கேட்பது அவர் ஒரு தமிழர் என்பதால் அவரை ஓரங்கட்ட வேண்டும் என்ற நிலைப் பாட்டிலேயன்றி வேறில்லை.

விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். கொலை, கொள்ளை, களவு, பாலியல் துஷ்பிரயோகம் எதுவும் கிடையாது.

அவ்வாறு யாரேனும் தப்பித்தவறி செய் தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப் பட்டது. இதனால் தமிழ் மக்கள் நிம்மதியாக உறங்கினர்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன மிக உச்சமாகப் பேணப்பட் டது என்பதை வெளிநாட்டுப் பிரமுகர்கள் மனப் பூர்வமாக ஏற்றுள்ளனர்.

ஏன்? விடுதலைப் புலிகளால் தடுத்து வைக் கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட  படைத் தளபதிகள் மற்றும் கப்பல் தளபதிகள் விடுத லைப் புலிகளின் ஒழுக்கத்தை - கட்டுப்பாட்டை - நிர்வாகத்தை வியந்து பேசியுள்ளனர்.

அப்படியானால் அவர்களுக்கும் அந்நேரம் தண்டனை வழங்கியிருக்க வேண்டும். எனி னும் அதை இலங்கை ஆட்சியாளர்கள் செய்ய வில்லை எனும்போது அதற்கு அவர்கள் தமி ழர்கள் இல்லை என்பதே காரணம் என எடுத் துக் கொள்ளலாமா? என்பது நம் கேள்வி.

தவிர, விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண் டும் என்ற அமைச்சர் விஜயகலாவின் உரை விடுதலைப் புலிகள் இராணுவத்துடன் சண்டை பிடிப்பதற்காகவோ அன்றி நாட்டைப் பிரிப்பதற் காகவோ அல்ல.

மாறாக வட்டுக்கோட்டையில் நடந்த கொடூ ரம், சுழிபுரத்தில் நடந்த மிலேச்சத்தனம், நாளா ந்தம் நம் மண்ணில் நடக்கும் வாள்வெட்டு, அடாவடித்தனம் இவற்றின் காரணமாகவே மீண் டும் விடுதலைப் புலிகள் வரவேண்டும் என்ற கருத்தை அமைச்சர் விஜயகலா முன்வைத்தார்.

இவ்வாறு அமைச்சர் விஜயகலா கூறிய தைக் கண்டு கூக்குரல் இடுவோர், வடபகுதி யில் நடக்கும் பயங்கரங்களை ; போதைவஸ்து பாவனைகளைக் கண்டித்து கூக்குரல் இடாத தும் வடக்கில் உள்ள பொலிஸார் என்ன செய் கிறார்கள் எனக் கேட்காததும் ஏன்?

ஆக, அமைச்சர் விஜயகலா ஒரு தமிழர். அவரையும் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
  தமிழனுக்கு எந்தப் பதவியை யும் கொடுக்கக்கூடாது என்ற மனவக்கிரமே எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila