உரையால் உயர்ந்த விஜயகலா செயலால் தாழ்ந்த பிரதமர் ரணில்

பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சர்  பதவியை நேற்றையதினம் இராஜினாமாச் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கட ந்த 02ஆம் திகதி நடந்த நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என திருமதி விஜயகலா மகேஸ்வரன் உரை யாற்றியிருந்தார்.

அவரின் உரை தொடர்பில் இலங்கைப் பாராளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டிருந்ததுடன் அமைச்சுப் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்ற கோசமும் ஒலித்தது.

விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒரு தமிழ் அமைச்சர் கதைத்துவிட்டார் என்பதற்காக அவரைப் பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கேட்டிருந்தார்.

இதற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை நேற்றையதினம் இராஜினாமாச் செய்துள்ளார்.

திருமதி விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த தனூடு தமிழ் மக்கள் மத்தியில் தன்னை உயர்த் திக் கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிய திருமதி விஜய கலாவின் அமைச்சுப் பதவியைக் காப்பாற்ற முடியாதவராகிவிட்ட, அந்தக் கட்சியின் தலை வரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் மத்தியில் தாழ்ந்து போயுள்ளார்.

ஆம், வட மாகாணத்தில் மிக நீண்டகாலத் துக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுத்த பெருமை தியாகராசா மகேஸ்வர னைச் சாரும்.

மகேஸ்வரனின் மறைவுக்குப் பின்னர் அந்த இடத்தைத் தக்க வைத்தவர் திருமதி விஜய கலா மகேஸ்வரன்.

இருந்தும் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று திருமதி விஜயகலா மகேஸ்வரன் கூறிவிட்டார் என்பதற்காக, அவர் அமைச்சுப் பதவியை துறக்க வேண்டும் என இந்த நாட்டின் பிரதமர் கேட்டார் எனும் போது, விடுதலைப் புலிகளை உச்சரித்தால் அது தொடர்பில் சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்களப் பேரினவாதிகளும் எந்தளவு தூரம் கொதித்துப் போகின்றனர் என்பதை நாம் நேரில் காண முடிந்தது.

தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகளை உச் சரித்ததற்காக அவரின் அமைச்சுப் பதவியைப் பறித்தவர்கள்; இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள், தமிழ் மக்களின் உரிமையைத் தருவார்கள் என்று யார் நம்பினாலும் அதை விட்ட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.

எதுஎவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பக்கபலமாக இருப் பதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களை உதாசீனம் செய்கிறது என்பது நிரூபணமாகிறது.

இதற்கெல்லாம் தக்க பாடத்தை கூட்டமைப் பினர் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்தே கற்றுக் கொள்ளுவர் என்பது நிறுதிட்டமான உண்மை.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் இணை ந்து தமிழர் தாயகத்தில் தேர்தலில் போட்டி யிடுகின்ற தமிழர்கள் இனிமேலாவது பேரின வாதத்தின் உள்ளார்ந்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila