டெனீஸ்வரன் விவகாரம் சூடு பிடிக்கிறது! நெருக்கடி நிலைக்குள் முதல்வர்!!

dineshவடக்கு மாகாண மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து, வர்த்­தக வாணிப மற்­றும் கிராம அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக சட்­டப்­படி பா.டெனீஸ்­வ­ரன் பதவி வகிக்க வேண்­டும். அவ­ரது அமைச்­சுக்­க­ளைப் பகிர்ந்து கொண்­ட­வர்­கள் அந்­தப் பத­வி­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக வில­க­வேண் டும் என்ற கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றின் கட்­டளை வடக்கு மாகாண ஆளு­ந­ர் றெஜினோல்ட் குரேக்கு நேற்றுக் கிடைத்­துள்ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
அதை­ய­டுத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னின் முன்­னயை துறை­களை அவ­ருக்கு ஒதுக்­கி­ய­தன் அடிப்­ப­டை­யில் 5 அமைச்­சர்­கள் கொண்ட மாகாண அமைச்­சர் வாரி­யத்­தின் விவ­ரத்­தைத் தரு­மாறு வடக்கு மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­யுள்­ளார் என அறிய முடி­கின்­றது.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக முன்­னாள் மாகாண அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் தாக்­கல் செய்­தி­ருந்த மனு மீதான கட்­ட­ளையை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை வழங்­கி­யது.
முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தம்­மைப் பத­வி­யில் இருந்து நீக்­கி­யது தவறு என்று உத்­த­ர­வி­டக் கோரி, வடக்கு மாகாண முன்­னாள் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.
நீதி­ய­ர­சர்­கள் குமு­தினி விக்­ர­ம­சிங்க, ஜானக டி சில்வா ஆகி­யோ­ரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசா­ரித்து கட்­டளை வழங்­கி­யது. அந்­தக் கட்­டளை, வடக்கு மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரேக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டது. கொழும்­பி­லுள்ள ஆளு­நர் அலு­வ­ல­கத்­துக்கு கட்­டளை நேற்­றுக் காலை கிடைத்­தது.
டெனீஸ்­வ­ர­னின் துறை­க­ளில், போக்­கு­வ­ரத்து அமைச்சை முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தன்­வ­சம் எடுத்­துக்­கொண்­டார். விவ­சா­ய­மும் கம­நல சேவை­க­ளும், கால்­நடை அபி­வி­ருத்தி, நீர்ப்­பா­ச­னம், நீர்­வ­ழங்­கல் மற்­றும் சுற்­றா­டல் அமைச்­சு­டன் மீன்­பிடி அமைச்­சும் இணைக்­கப்­பட்டு அமைச்­சர் கந்­தையா சிவ­நே­ச­னுக்கு வழங்­கப்­பட்­டது.
மக­ளிர் விவ­கா­ரம், புனர்­வாழ்­வ­ளித்­தல், சமூக சேவை­கள், கூட்­டு­றவு, உணவு வழங்­கல் – விநி­யோ­கம் -தொழிற்­துறை, தொழில் முனை­வோர் மேம்­ப­டுத்­தல் ஆகி­ய­வற்­று­டன் வர்த்­தக வாணி­பத்தை இணைத்து அமைச்­சர் அனந்தி சசி­த­ர­னுக்கு வழங்­கப்­பட்­டது.
தற்­போது டெனீஸ்­வ­ரன் மீள­வும் அமைச்­ச­ர­வை­யில் இணைக்­கப்­பட்­டால் அமைச்­சர் ஒரு­வர் பதவி வில­க­வேண்­டும்.
5 அமைச்­சர்­க­ளாக மாற்­றம் செய்­யும்­ வ­ரை­யில் உத்­தி­யோக பூர்­வ­மாக வடக்கு மாகாண அமைச்­ச­ரவை இயங்க முடி­யாது. அமைச்­ச­ர­வை­யினை 5 பேராக மாற்­றும் பொறுப்பு நீதி­மன்ற ஆணை­யின்­படி ஆளு­ந­ருக்கே வழங்­கப்­பட்­டுள்­ள­த­னால் அதனை நிறை­வேற்­ற­வேண்­டிய கட்­டா­யம் ஆளு­ந­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.
இதன் கார­ண­மாக டெனீஸ்­வ­ரன் உள்­ள­டங்­க­ளாக ஏனைய அமைச்­சர்­க­ளின் பெயரை உட­ன­டி­யாக பரிந்­து­ரை­கு­மாறு முத­ல­மைச்­சரை தற்­போது ஆளு­நர் கோரி­யுள்­ளார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila