இந்த அறிவித்தலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், கடிதம் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
‘ஜனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றும்போது அதில் கலந்துகொண்ட அரச அலுவலர்கள் பெரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். எனவே இது குறித்து அரச உத்தியோகத்தர்களின் மீது விசாரணைகளை நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் “தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும்” என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இந்த விடயம் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.