அனைத்தும் எனக்கே:வடக்கு ஆளுநர்?

வடமாகாணசபையின் நியமனங்களிற்கான கடிதங்களை தானே தன் கையால் கையளிக்கவேண்டுமென ஆளுநர் ரெஜினோல்ட் கூரே போர்க்கொடி தூக்கியுள்ளார்.வடமாகாணத்திலுள்ள ஆளணி வெற்றிடங்கள் தற்போது வேக வேகமாக வடக்கு முதலமைச்சரது அறிவுறுத்தலிற்கு அமைய நிரப்பப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் அவ்வாறு வழங்கப்படுகின்ற நியமனக்கடிதங்கள் முதலமைச்சராலேயே பணியாளர்களிற்கு வழங்கப்படுவது வழமையாகும்.அதனையே தற்போது நிறுத்தி நியமனக்கடிதங்களை தான் வழங்கவேண்டுமென ஆளுநர் பணித்திருப்பதாக தெரியவருகின்றது.

இதனிடையே இவ்வாறான நடவடிக்கைகளில் ஆளுநர் செயற்பட பின்புல தூண்டுதல்களே காரணமென சொல்லப்படுகின்றது.குறிப்பாக கூட்டமைப்பினை சேர்ந்த சிலர் ஆளுநரை தூண்டியதாலேயே இவ்வாறான பணிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila