தமிழினம் படும் துன்ப துயரங்களை தமிழ் அரசியல் தலைமை உணராமல் இருக்கிறதேயன்றி மற்றும்படி சர்வதேசமும் தமிழ் மக்களும் மிகத் தெளிவாக அவற்றை உணர்ந் துள்ளனர்.
அதிலும் போருக்குப் பின்பாகத் தமிழ் மக் கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் சொல்லிமாளா.
எனினும் இது விடயங்களில் கூட நம் அரசி யல் தலைமை கவனம் செலுத்துவதாக இல்லை.
இருந்தும் தமிழ் மக்களுக்கு நடக்கின்ற அநீதிகள் பற்றி சர்வதேச அமைப்புகள் கருத் துரைப்பதிலும் கவலை தெரிவிப்பதிலும் கரு சனை கொண்டுள்ளன என்ற செய்தி மட்டுமே மன ஆறுதலைத் தருகின்றது.
இதில் இலங்கையிலுள்ள நிதி நிறுவனங் கள் நுண்கடனை வழங்கிவிட்டு பாலியல் இலஞ்சம் கோருகின்றன என ஐ.நாவின் வெளி நாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகளுக் கான சுயாதீன நிபுணர் ஜுவான் பப்லோ பெகொஸ்லவ்ஸ்கி என்பவர் கூறியுள்ளார்.
அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை இலக்கு வைத்து நுண்கடன்களை வழங்கி பாலியல் இலஞ்சம் கோரும் கொடூரம் நடந்து வருகினறது என அவர் வெளியிட்ட கருத்து இலங்கைக்கு மிகப்பெரும் அவமானத்தைக் கொடுப் பதாகும்.
தவிர, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு நுண்கடன்களை வழங்கிவிட்டு, அவற்றை வசூலிப்பதற்கு எடுக்கப்படுகின்ற நட வடிக்கைகளைக் கேள்வியுறும் போதெல்லாம் இதயம் பற்றி எரிந்து கருகிப் போகும்.
அந்தளவுக்கு நுண்கடன் வசூலிப்பவர்களி னதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினதும் அக்கிரமங்கள் தலைவிரித்தாடுகின்றன.
இதனால் தற்கொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்தேறுகிறது.
இவ்வாறு தமிழர் பகுதியில் நடக்கின்ற தற்கொலைச் சம்பவங்களைக் கூட வெளியில் வரவிடாமல், தென்பகுதிப் பேரினவாதம் மறைத் துக் கொள்கிறது.
இந்த வகையில் தமிழினம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டது என்பதற்கு அப்பால், யுத்தத்துக்குப்பின்பான பாதிப்புக்கள் யுத்தகாலப் பாதிப்புகளுக்கு ஈடாக உள்ளது.
எனினும் இதுபற்றிய வெளிவருகை அமுங் கிப் போவதுதான் மிகப்பெரும் வேதனை.
இவை ஒருபுறமிருக்க, யுத்தத்தால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு நுண்கடன்களை வழங்கிவிட்டு பாலியல் இலஞ்சம் கோருகின்ற தகவலை ஐ.நா நிபுணர் வெளிப்படுத்தியுள்ளார் எனும்போது,
அது தொடர்பில் நுண்கடன் வழங்கும் நிறு வனங்கள் நாணித் தலைகுனிய வேண்டும்.
எதுவாயினும் இதுபோன்ற அக்கிரமங்களை வேரோடு பிடுங்கி தமிழ்ச் சமூகம் எழுகை பெறவேண்டும் என்பதுதான் இங்கு முக்கிய மானவிடயம்.


