செம்மணிக்கும் வெள்ளை: ஆளுநர் ஒப்பந்தகாரர்!

தமிழினப்படுகொலை நடந்தேறிய பிரதேசங்களிற் வெள்ளையடிப்பதை சிங்கள அரசுகள் பிரதான தொழிலாக கொண்டு செயற்பட்டுவருகின்றன.அவ்வகையில் செம்மணி படுகொலை நடந்தேறிய தரவைக்கு வடக்கு ஆளுநர் கூரேயுடன் வெள்யைடித்து தமிழ் அரசியல்வாதிகள் தமது அரச விசுவாசத்தை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணவி கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவளது தாய்,சகோதரன் மற்றும் அயலவர் படுகொலை செய்யப்பட்ட அதே செம்மணி இராணுவ காவலரண் அமைந்திருந்த சூழலில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நடத்திய மரநாட்டுக்கை நிகழ்விற்கே பங்கெடுத்து தமது விசுவாசத்தை இப்போது வெளிப்படுத்தியுள்ளனர்.

செம்மணி படுகொலைகளை அரங்கேற்றிய அதே படையினரின் அனுசரணையுடன் புனரமைக்கப்பட்ட தரவையில் ஆளுநர் தலைமையில் அவர்கள் மரம் நாட்டியுள்ளனர்.

ஆகக்குறைந்தது செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியெங்கும் புதைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பில் தமது வாயை கூட அவர்கள் திறந்திருக்கவில்லை.அவர்களிற்கு அஞ்சலிக்கவும் அவர்கள் தயாராக இல்லை. 

தனது அரசியலிற்கு தேசியம் பேசுகின்ற யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் முதல் புரட்சிக்கவிஞர் மற்றும் ஆணையாளரான ஜெயசீலன் வரையும் அதே போன்று கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் பலரும் ஆளுநரின் மரநடுகைக்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த மரநாட்டுவிழா நடத்தப்பட்ட தரவையினை பராமரிக்கும் பொறுப்பினை இலங்கை படையினரே பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila