தமிழ் இளைஞர்களைக் கடத்திக் கொன்ற குற்றவாளிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவி

சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, விசாரணைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்க ஜனாதிபதி முன்னிற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படைத்துறைப் பதவிகளில் மிக உயரியதாக மதிக்கப்படும் பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கும் அதிகாரத்தை முப்படைகளினதும் தளபதியான சிறிலங்கா அதிபர் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே, அவர் இறுதிப்போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கியிருந்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila