கொலைகாார கும்பலுடன் சேர்ந்துள்ள சிறிசேனவின் அரசியலுக்கு முடிவு கட்டுவேன்! - சந்திரிகா சூளுரை

ஆட்­சி­யைப் பிடிக்­கத் துடிக்­கும் கொலை­கார ராஜ­பக்ச கும்­ப­லு­டன் கைகோர்த்­துள்ள மைத்­திரி அணி­யின் அர­சி­ய­லுக்கு முடி­வு­கட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உண்­மை­யான உறுப்­பி­னர்­கள் தயா­ரா­கி­விட்­டார்­கள். அவர்­க­ளுக்கு நான் உத­வு­வேன் என்று, முன்­னாள் ஜனாதிபதி  சந்­தி­ரிகா குமாரதுங்க தெரி­வித்­தார்.

'அர­சி­யல் சூழ்ச்­சி­யில் ஈடு­ப­டும் பழக்­கம் எனக்கு இல்லை. குமார வெல்­கம மட்­டு­மல்ல, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­கள் பலர் என்­னு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர். ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இறு­திச் சந்­தர்ப்­பம் வழங்கி கடி­தம் எழு­தி­னேன். அவர் அதற்கு உரிய பதில் வழங்­க­வில்லை.
எனது தந்­தை­யும், தாயும், நானும் சேர்த்து வளர்த்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­லி­ருந்து என்­னைத் தூக்கி எறி­யும் நட­வ­டிக்­கை­யில் அவர் ஈடு­ப­டு­கின்­றார். இந்த மோச­மான செய­லுக்கு அவர் பெரி­ய­தொரு பின்­வி­ளைவை அனு­ப­விப்­பார்.
2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அரசை உரு­வாக்­கு­வ­தற்­காக நான் இரவு, பகல் பாடு­பட்­டேன். என்­னைப் போன்று சிவில் சமூ­கப் பிர­தி­நி­தி­க­ளும் பாடு­பட்­டார்­கள். ஆனால் மைத்­தி­ரி­பால, எனக்கு மட்­டு­மல்ல இந்த நாட்டு மக்­க­ளுக்­கும் துரோ­கம் இழைத்­துள்­ளார். கொலை­கார ராஜ­பக்ச கும்­ப­லு­டன் சேர்ந்து நாட்டை நாச­மாக்­கி­விட்­டார். மைத்­திரி அணி­யி­ன­தும், மகிந்த அணி­யி­ன­தும் அர­சி­ய­லுக்கு முடி­வு­கட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உண்­மை­யான பிர­தி­நி­தி­கள் தயா­ரா­கி­விட்­டார்­கள். அவர்­கள் எடுக்­கின்ற முயற்­சி­க­ளுக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கு­வேன்” என்­றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila