![]()
போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் போதைப்பொருட்களை விதைத்துள்ளதாகவும், வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் அரசியல்வாதிகள் ஊடாகவே அதிகளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.
|
மன்னார் - அடம்பன் மகா வித்தியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
'நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கின்றார்கள். இதற்கு காரணம் அரசியல் வாதிகள். தங்களுடைய சுய இலாபத்திற்காக தங்களுடைய வாகனங்களிலே போதைபொருட்களை கொண்டு செல்கின்றார்கள். உண்மையிலேயே அரசியல்வாதிகளுடைய வாகனங்கள் பெரிதும் சோதிக்கப்படுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று குறிப்பிடும் போது பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை சோதனையிடுவதில்லை. அந்த வாகனத்தில் என்ன போகின்றது என்பது தெரியாது. இப்படித் தான் கடந்த காலங்களில் போதை பொருட்கள் அதிகம் எமது பிரதேசங்களுக்குள் வந்துள்ளது. இதை பல இடங்களில் கண்டு பிடித்துள்ளோம். நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதை நிச்சயமாக நிறுத்த வேண்டும். இதனால் தான் சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வல்லுறவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
|
வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் கடத்தும் அரசியல்வாதிகள்! - விஜயகலா பரபரப்பு குற்றச்சாட்டு.
Add Comments



