கொட்டும் மழையிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் கொட்டும் மழையிலும் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டமானது கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா நகரின் ஊடாக 715வது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்ட கொட்டகையினை சென்றடைந்திருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது “எங்களது பிள்ளைகள் எமக்கு வேனும், எமது உறவுகள் எமக்கு வேனும், அமெரிக்காவே எமது பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தர வரவேண்டும்“ என்ற கோசங்களையும் எழுப்பியவாறு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila