ஐ.நா வின் முக்கிய அதிகாரி இலங்கைக்கு விஜயம்!

பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர நிபுணர் விக்டர் மட்ரிகல் பொர்லோஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எனினும் அவரின் இந்த விஜயத்துக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila