போர்க்குற்றங்களை ஏற்றுக் கொண்டார் மஹிந்த!

இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்றங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டனர் என்பதை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகவியலாளர்களுடன் நடத்தியசந்திப்பின் போது மஹிந்த இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடக்கும் நிலையில், இராணுவத்தினரின் போர்க்குற்றங்களை மஹிந்த முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
“இராணுவத்தினரால் போர்குற்றம் நடந்தது என்பது உண்மை தான். அதேபோன்று விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.இராணுவத்தினருக்கு மாத்திரம் தண்டனை வழங்க முடியாது. விடுதலைப் புலிகளுக்கும் அவ்வாறான தண்டனை வழங்க வேண்டும் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
அப்போதைய ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த, மனிதாபிமான போரினை இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். எந்தவொரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என இதுவரை காலமும் தெரிவித்து வந்தார்.இந்நிலையில் முதன்முறையாக இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila