அநுரவின் புதிய பயணம்: விடுதலை புலிகள் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்ட நாள்!

விடுதலை புலிகள் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்ட ஒரு தினம் தான் நவம்பர் 14 என பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் குறிப்பிட்டுள்ளார். ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ விடுதலை புலிகள் 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட நிலையில், இந்த நாடாளுமன்ற தேர்தலன்று கொள்கை ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களுக்கு முன்னர் போன்று தமது உரிமைகள் தொடர்பில் கரிசனை இல்லையோ என்ற கேள்வியெழும்புகின்றது. தமிழ் மக்களுக்கென்று விசேடமான உரிமைகளை அநுர அரசாங்கம் நிச்சயமாக கொடுக்கப்போவதில்லை. தமிழ் மக்கள் மாற்றான தமிழ் சக்திகளுக்கு வாக்களித்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் இந்த கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்று முழுவதுமாக எதிர்த்து நின்ற கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள்.” என்றார். இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila