சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு 4வது தடவையாக சேவை நீடிப்பு!– பாதுகாப்புச் செயலாளர் பரிந்துரை

எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியுடன் கட்டாயம் சேவையில் இருந்து ஓய்வுபெற வேண்டிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு மீண்டும் 6 மாத சேவை நீடிப்பை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பரிந்துரைத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வரலாற்றில் மிக நீண்டகால சேவை நீடிப்பபை பெற்று அனுர சேனாநாயக்க சாதனை படைத்துள்ளார்.
அனுர சேனாநாயக்கவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படுவதை பொலிஸ் மா அதிபர் எதிர்த்துள்ள போதிலும், சேவை நீடிப்புக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக ஜனாதிபதியே நேரடியாக அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் உட்பட ராஜபக்சவினருக்கு மிக நெருக்கமான அனுர சேனாநாயக்கவுக்கு ஏற்கனவே மூன்று முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச சேவையில் ஓய்வுபெறும் வயதான 60 வயதையும் தாண்டியுள்ள அனுர சேனாநாயக்க , இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் வயது முதிர்ந்த அதிகாரி எனக் கூறப்படுகிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila