பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார்!- இன்று மனைவி சாட்சியம்!

தனது கணவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் வயது 26 முகமாலைப் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இதுவரை அவர் குறித்த எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை என அவரது மனைவி சாட்சியமளித்தார்.
பிரபாகரன் பாலேஸ்வரி. ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு இன்று புதன்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது.
இதில் சாட்சியமளித்த குறித்த பெண் நாங்கள் வவுனியா ஈச்சங்குளத்தில் வசித்து வந்தோம். பின்னர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி,  முரசுமோட்டைப் பகுதியில் குடியேறிய போது எனது கணவர் தொழிலுக்காக வேறு பலருடன் முகமாலைக்குச் சென்றார்.
கடந்த 2006.09.09 அன்று எனது கணவர் முகமாலையில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், அப்பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினர்  அங்கு நின்றவர்களை கைது செய்து சென்றனர் என்று அவருடன் வேலை செய்தவர்கள் மீண்டு வந்து தெரிவித்தனர்.
யுத்தம் முடிந்த பின்னர் 2010ம் ஆண்டு பொலிஸ் நிலையம், மனித உரிமை ஆணைக்குழு என்பவற்றில் நான் முறையிட்டேன்.
மனித உரிமை ஆணைக்குழுவில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயருடைய ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருக்கிறார் என்று பட்டியல் ஒன்றைக் காண்பித்தனர்.
எனினும் பின்னர் சில நாட்களில் அவ்வாறு எவரும் இல்லை என மறுத்து விட்டனர் என்றார் அந்தப் பெண்.
முகமாலை யாருடைய கட்டுப்பாட்டில் அப்போது இருந்தது என ஆணைக்குழுவினர் கேட்டதற்கு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என அப்பெண் பதிலளித்தார்.
தளபதி ராகுலனின் மனைவி இராணுவத்திடம் சரணடைந்த எனது கணவரை காணவில்லை
முல்லைத்தீவுப் பகுதியில் பிரான்சிஸ் அடிகளாருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் எனது கணவரும் சரணடைந்தார். இன்றுவரை அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார் பெண் ஒருவர்.
ஜனாதிபதி ஆனைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வு இன்று வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போது சாட்சியமளித்த திருமதி ரூபன் ஸ்ரீமீனலோஜினி, எனது கணவரான ராகுலன் மாமா என்று அழைக்கப்படும் தேவதாஸ் ரூபன் என்பவர் கடந்த 2009.05.18 அன்று வட்டுவாகல் ஊடாக முல்லைத்தீவுக்குச் சென்று பிரான்சிஸ் அடிகளாரிடம் இணைந்து இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
சரணடைவதற்கு முதல் நாள் தெரிந்த ஒருவர் ஊடாக எனக்கு 10 ஆயிரம் ரூபா பணத்தையும் அவர் கொடுத்தனுப்பி இருந்தார். நானும் எனது பிள்ளைகள் நால்வரும் 17 ஆம் திகதி செட்டிகுளம் முகாமுக்கு வந்து சேர்ந்தோம். அதன் பின்னர் எனது கணவர் குறித்து எங்கு தேடியும் பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார் மீனலோஜினி.
இதன்போது “உங்கள் கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தாரா, எவ்வளவு காலம் இருந்தார்” என்று ஆணைக்குழுவினர் கேட்டனர். அதற்கு ஆம், அவர் நீண்ட காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்.
பின்னர் விலகி மீண்டும் இணைந்து கொண்டார் என மீனலோஜினி தெரிவித்தார். மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளில் ஷெல் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பதற்கு மக்கள் பகுதிகளை நோக்கி இராணுவத்தினரே ஷெல் தாக்குதல்கள் நடத்தினர் என்றார்.
மக்களை யாராவது மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினரா எனக் கேட்டதற்கு அப்படி யாரும் எம்மைத் தடுக்கவில்லை எனவும் மீனலோஜினி சாட்சியம் அளித்தார்.
கோடரியால் கதவை கொத்தி திறந்து அப்பாவை இராணுவம் பிடித்து சென்றது! 13 வயது மகன் உருக்கம்
செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் உள்ள எமது வீட்டின் கதவை கோடரியால் கொத்தித் திறந்த இராணுவம் அப்பாவை பிடித்துச் சென்றது என 13 வயது மகன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila