தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருந்தது. ஐரோப்பிய நீதிமன்றின் தீர்மானத்திற்கு அமையவே இவ்வாறு தடைப் பட்டியலிலிருந்து புலிகள் இயக்கம் நீக்கப்பட்டது. எனினும், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்மானம் புலிகளுக்கு எதிரான பிரித்தானிய தடை உத்தரவில் மாற்றம் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளுர் சட்டங்களின் அடிப்படையில் தடை தொடர்பான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் தொடரும்!
Add Comments