யாழில் மகிந்தவின் இன்னொரு தேர்தல் பரப்புரை


news
யாழ்.தேவி புகையிரதம் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரை தனது பயணத்தை விஸ்தரிக்கவுள்ளது.
 
தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் மகிந்த ராஜபக்ச அன்றைய தினம் உத்தியோக பூர்வமாக அதனை ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மிக விரைவாக இடம்பெற்று வருகிறது.
 
எனவே அதற்குள் அனைத்து புனரமைப்பு வேலைகளையும் செய்து முடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகள் தெற்கில் சூடு பிடித்திருந்த நிலையில் வடக்கில் எந்தவித முன்னேற்பாடுகளும் அற்று காணப்படுகிறது..
 
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது குறித்து இதுவரை எந்த விதமான அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை.
 
இந்த நிலையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட எதிரணியினர் எதிர்வரும் 30ம் திகதி பரப்புரைகளை வடக்கில் ஆரம்பிக்க உள்ளனர்.
 
அவரை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச தலமையிலான குழுவினர் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே யாழிலிருந்து காங்கேசன் துறை வரையான பகுதிகளிக்கான ரயில் பாதையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், அந்தப் பகுதியில் தேர்தல் கூட்டம் ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila