யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த சுகாதார ஊழியர்கள் 178 பேருக்கு இன்று நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வுகள் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. ஊழியர்களுக்கான நியமனக்கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்துள்ளார்.
குறித்த 178 சுகாதார ஊழியர்களும் நாளாந்தம் 390 ரூபா சம்பளத்துடன் 7000ஆயிரம் ரூபா வாழ்க்கைப்படியையும்
தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் 3வருடங்களாக பெற்று வருகின்றனர்.
எனினும் மூன்று வருட முடிவில் நிரந்தரநியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்படியே இன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் நியமனம் வழங்குவது இரகசியமான முறையிலேயே நடைபெற்று முடிந்ததுடன் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களும் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளநிலையில் எவ்வாறானதொரு நியமனமோ அல்லது அரச சேவைகளோ வழங்கமுடியாது என்பது சட்டம்.
இவ்வாறான நிலையில் இன்று வழங்கப்பட்ட நியமனக்கடிதங்களானது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைகின்றது.
அமைச்சரின் இவ்வாறான செயற்பாடுகள் மகிந்த ராஜபக்சவிற்கான மறைமுகமான தேர்தல் பரப்புரையாகவே அமைகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.