வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளின் போது கடந்த காலங்களில் பொலிஸாருடன் இணைந்து அரச அச்சகக் கூட்டுத்தாபன பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும், அச்சகக் கூட்டுத்தாபன பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்பட்டு, முழுப் பாதுகாப்புப் பொறுப்பும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் பகலிரவாக நடைபெற்றது.
இம்முறை பகல் வேளையில் மட்டுமே வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படுகின்றன.
இவ்வாறு பகலில் அச்சிடப்படும் வாக்குச் சீட்டுக்களை இரவில் பொலிஸார் மட்டும் பாதுகாப்பது சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.
தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டு செயற்படுத்தாத பொலிஸார், நேர்மையாக தமது கடமைகளை செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.
எனவே, பொலிஸாருடன் அரச அச்சகக் கூட்டுத்தாபன பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென அந்த அதிகாரி கோரியுள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றிடம் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கருத்து வெளியிட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை பத்திரிகை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.