வெளிநாட்டில் இருந்து வந்த சிறி என்பவரே தாம் புளொட்டில் இருந்து பிரிந்தவர்கள் என தெரிவித்து பசிலை சந்தித்து மகி;தவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளர் என வட மாகாணசபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் இன்று (21.12) தெரிவித்தார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புளொட் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாக வவுனியாவில் வைத்து நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இன்று அவரிடம் புளொட்டின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
சிறி என்பவர் 1990 களில் எம்மிடம் வந்து தனக்கு பாதுகாப்பு தேவை என தெரிவித்து சிறிது காலம் எம்முடன் இருந்தார். அதன் பின்னர் அவர் பரிசிற்கு சென்றார். தற்போது அவரே மீண்டும் இலங்கைக்கு வ்து அரசசார்பற்ற நிறுவனங்களை நடத்திப பல பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருந்தார்.
அவரே தற்போது புளொட்டில் இருந்து பிரிந்து நிறகின்றோம் என தெரிவித்து பசிலை கண்டு கதைத்துள்ளார். அதற்கு சார்பாக நோட்டிஸ் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர். அதனையும் கொடுத்தார்களோ தெரியவில்லை. அத்துடன் அவருடன் எத்தனைபேர் உள்ளனர் என்பதும் எனக்கு தெரியவில்லை.
ஆனால் புளொட்டை பொறுத்தவரையில் தமிழ் தேசயிக்கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கின்றதோ அதுவே முடிவாக இருக்கும்.


