மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் விளம்பரத்தை நாம் பிரசூரிக்கவில்லை – ஆனந்தா கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம்

மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும்  விளம்பரத்தை நாம் பிரசூரிக்கவில்லை – ஆனந்தா கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம்:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கும் வகையிலான செய்தித்தாள் விளம்பரத்தை தாம் பிரசூரிக்கவில்லை என ஆனந்தா கல்லூரி பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினமும் இன்றைய தினமும் சிங்களப் பத்திரிகைகளில் ஆனந்த கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் பெயரில் ஜனாதிபதிக்கு ஆதரவாக முழுப் பக்க விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
படைவீரர்களையும் ஜனாதிபதியும் மின்சார நாற்காலியில் இருத்தி தண்டிக்க அனுமதிக்க முடியாது என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், யுத்தத்தில் பங்கேற்ற முக்கிய அனைத்து படை அதிகாரிகளின் புகைப்படங்களும் பிரசூரிக்கப்பட்டிருந்தது.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமது அமைப்பு ஆதரவளிக்கவில்லை என ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத் தலைவர் லலித் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பழைய மாணவர் அமைப்பு இரண்டு பிரிவுகள் உத்தியோகபூர்வமாக இயங்கி வருவதாகவும் இந்த இரண்டு பிரவுகளும் ஜனாதிபதி மஹிந்தவிற்காக பிரச்சாரம் எதனையும் செய்யவில்லை எனவும் அறிவித்துள்ளாh.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila