இனவாதத்தின் இடமாற்றத்திற்கான தேர்தலும் தேசிய இனங்களும் -அ.நிக்ஸன்

இனவாதத்தின் இடமாற்றத்திற்கான தேர்தலும் தேசிய இனங்களும்   -அ.நிக்ஸன்-

நோர்வையைஅனுசரணைமுயற்சிக்குஅழைத்ததலைவர்கள் அதனை விமர்சித்து எதிர்ப்பு வெளியிட்டமையும் இன்றையஅரசியல் அவலநிலைமைக்கு பிரதானகாணங்கள்.

1958ஆம் ஆண்டுஇனக்கலவரம் முதல் 2009ஆம் ஆண்டுமுள்ளிவாய்கால் வரையான அழிவுகளுக்கும் இனரீதியான வேறுபாடுகளுக்கும் இன்றுவரை தீர்வுகாண தென்பகுதியைi மயமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்பதைத்தான் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

-அ.நிக்ஸன்-

ஏதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பொது எதிரணியின் வேட்பாளராக அல்லது ஐக்கிய தேசியகட்சியின் ஜனாதிபதிவேட்பாளராகநிறுத்தமுடியாமல் போனது ஏன் என்றகேள்வியை அரசியல் விஞ்ஞானமாணவன் ஒருவன் கேட்டான். அதற்குபதிலளித்த விரிவுரையாளர் ரணில் விக்கிரமசிங்க சிங்கள இனவாதி அல்லஎன்று கூறினார். அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணிஅரசாங்கம் 2002ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுநடத்தியது. உடன்படிக்கையும் செய்துகொண்டது. இந்த அரசியல் அணுகுமுறை சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு ஒத்துவரவில்லை. ஐக்கியதேசியகட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கும் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் பேச்சுநடத்தியது பிடிக்கவில்லை என்றும் அந்த விரிவுரையாளர் சுட்டிக்காட்டினார்.

இரண்டுகாரணங்கள்

மாணவன் மீண்டும் விரிவுரையாளரிடம் கேட்டான், அப்படியானால் 2005ஆம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகதமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் புலிகள் ஏன் தடுத்தனர் என்று அதற்கு பதிலளித்த விரிவுரையாளர் இரண்டு காரணங்களை கூறினார். ஒன்று ரணில் விக்கிரமசிங்க பேச்சுநடத்தினாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாகஎதையும் வழங்கமாட்டார் எனவும் சிங்கள இனவாதிகளை மீறி அவரது அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றும் புலிகளுக்கு அனுபவரீதியாக தெரியும். இரண்டாவது ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டவர் அவர் சர்வதேச நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றது போல செயற்பட்டு தமது போராட்டத்தை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என்ற உணர்வு புலிகளிடம் இருந்திருக்கலாம் எனவும் கூறினார்.

இந்த காரணங்களின் அடிப்படையில் தமிழ் மக்களை வாக்களிக்கவிடமால் புலிகள் தடுத்திருக்கலாம் என்று கூறியதுடன் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தீவிரமான பௌத்ததேசியவாத உணர்வு கொண்ட அரசாங்கம் ஒன்றுடன் பேச்சுநடத்தி தீர்வுகாண்பது இலகுவானதுஎனவும் புலிகள் நினைத்திருக்கக் கூடும் என்றும் அந்தவிரிவுரையாளர் கூறினார். விரிவுரையாளர் மாணவனுக்கு அளித்த விளக்கத்தில் சரிபிழை இருக்கலாம் விரிவுரையாளர் கூறியது போன்று பௌத்ததேசியவாத உணர்வு கொண்ட அரசாங்கம் ஒன்றுடன் பேச்சுநடத்தி தீர்வுகாணலாம் எனபுலிகள் நினைத்திருந்தால் யுத்தம் ஏன் மூண்டது என்ற கேள்வி எழுகின்றது.

ஐ.தே.கஒத்துழைக்கவில்லை

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகதெரிவுசெய்யப்பட்டதும் புலிகளுடன் நோர்வேயின் அனுசரணையுடன் தொடர்ந்து பேச்சுநடத்தினார். ரணில் விக்கிரமசிங்கஅரசாங்கம் நடத்தியபேச்சின் தொடர்ச்சியாக அது இல்லாவிட்டாலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இராணுவநிர்வாக முறையைநீக்கி ஜனநாயகவழிக்கு இடமளிப்பது குறித்தும் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுக்கள் நடந்தன. ஆனால் இந்தபேச்சுக்கள் நடைபெற்ற போது எதிர்க்காட்சியாக இருந்த ஐக்கியதேசியகட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கஅரசாங்கம் பேச்சு நடத்தியபோது மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்தஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்தது போன்றுரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சிதலைவாராக இருந்து கொண்டு விமர்சனம் செய்ததுடன் நோர்வேயின் அனுசரனை முயற்சியையும் விமர்சித்திருந்தார். ஆனால் நோர்வேயை அனுசரனையாளராக அழைத்ததுமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா. ஆகவே இங்குகேள்வி என்னவென்றால் பிரதானகட்சிகள் என கூறப்படும் ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியும் ஐக்கியதேசியகட்சியும் புலிகளுடனான பேச்சுக்கு நோர்வையை அனுசரனையாளராக அழைத்தமைக்கு பொறுப்புடையவர்கள். ஆனால் இரண்டுகட்சிகளும் மாறிமாறி அரசாங்கங்களை அமைத்தபோது நடத்திய பேச்சுகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணாத்திற்குரிய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டமை தொடர்பாக எதிர்க்கட்சியாக வந்ததும் பேசுவதில்லை.

தட்டிக்கழித்தனர்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு இனவாத பேச்சுக்களை முன்னெடுக்கின்றனர். இனவாதத்தை பேசுகின்ற போதுதான் வாக்குகளை பெறலாம் அரசாங்கத்தை கவிழ்க்கலாம் என்று இவர்கள் நம்புகின்றனர். யதார்த்தமும் அவ்வாறுமாறிவிட்டது. பௌத்த தேசியவாதத்தை மூலதனமாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 8 ஆம் திகதிநடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரச்சராங்களில் இரண்டுதரப்பும் ஈடுபடுகின்றமை அந்தயதார்த்தத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே இங்கு அந்தவிரிவுரையாளருடையஅவதானிப்பில் உள்ளதவறு என்ன வென்றால் ரணில் விக்கிரமசிங்கவை இனவாதி அல்ல என்று கூறியமைதான் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் நேரடியாக இனவாதத்தை பேசுவது போன்றுரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் பேசுவதில்லை. ஆனால் வேறு அரசியல்வாதிகள் மூலம் அல்லது எதிரணியின் இனவாதபேச்சுகள் ஊடாகதங்கள் கருத்தைநியாயப்படுத்தி அல்லது அவ்வாறான எதிர்ப்புகள் இருக்கும் போது எனது அரசாங்கத்தினால் எதுவும் செய்யமுடியாதுஎன கூறிதேசிய இனப்பிரச்சினைக்கான சந்தர்ப்பங்களை தட்டிக்கழித்தனர் என்பதுவெளிப்படையானது

பேச்சுகள் மூலம் ஏமாந்தனர்.
ஆகவேபேச்சுக்கள் மூலம் தற்காலிக யுத்தநிறுத்தங்கள் மூலம் தமிழர்கள் ஏமாந்தனர் என்பதற்கானபட்டறிவுகளைக் கொண்டுதான் ரணில் விக்கிரமசிங்கமீது அப்போதிருந்த கவர்ச்சிகரமான அரசியல் தன்மைக்குபுலிகள் இடமளிக்கவில்லை என்றகருத்துக்கு சிலவிமர்சகர்கள் உடன்பட்டனர். 1958 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் முதல் 2009ஆம் ஆண்டுமுள்ளிவாய்கால் வரையான அழிவுகளுக்கும் இனரீதியான வேறுபாடுகளுக்கும் இன்றுவரை தீர்வுகாண தென்பகுதியை மையமாகக் கொண்டசிங்கள அரசியல் கட்சிகள விரும்பவில்லை என்பதைத்தான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது சிங்கள வீரவிதானயஎன்ற இனவாத இயக்கம் ஒன்றை உருவாக்கினார். ரணில் விக்கிரசிங்க பிரதமராக பதவி வகித்த போது இந்த இனவாத அமைப்புகளின் எதிர்ப்புக்களை காரணம் கூறியிருந்தார். சுனாமிநிவாரணம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டபொதுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு அப்போது ஜனாதிபதியாக இருந்தசந்திரிக்கா இனவாத அமைப்புகளின் எதிர்ப்பைக்காரணம் காட்டினார். இந்தநிலையில் பொதுஎதிரணி வேட்பாளருக்கு அந்த இனவாத அமைப்புகளின் ஆதரவைரணிலும் சந்திரிக்காவும் தற்போது பெற்றுள்ளனர். ஆகவேரணில் விக்கிரமசிங்க தொடர்பாக அந்தமாணவன் எழுப்பிய கேள்விக்கு சரியானபதில் என்ன? இனவாதத்தின் இடமாற்றத்தில் தலைமையார் என்பதுதான் இங்குபிரச்சினை?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila