தொடரும் ஈபிடிபியின் அடாவடி! கிளி.கச்சேரி அனர்த்த முகாமைத்துவப் பிரிவில் இருந்த பொருட்கள் பறிப்பு

கிளிநொச்சி கச்சேரியின் அனர்த்த முகாமைத்துவப் பிரிக்கேயுரித்தான பொருட்களை ஈபிடிபியினர் அடாவடியாக கையகப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் 5.10 மணியளவில் ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் வட மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் ஆகியோர் தமது பிரத்தியேக வாகனங்கள் மூன்றிலும் உழவியந்திரத்துடனும் வலுக்கட்டாயமாக உத்தியோகத்தர்கள் எல்லோர் முன்னிலையிலும் பொருட்களை தமது வாகனங்களில் ஏற்றிய நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
பொதுமக்களுக்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்குவதற்கு வைத்திருந்த பொருட்களையே சந்திரகுமார். குழுவினர் தம்கையகப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்க அதிபர் ரூபாவதி கேதிஸ்வரன் தான் தேர்தல் கடைமைகளில் அவசரமாக ஈடுபடுகின்றவராக தன்னைக்காட்டி மறைமுகமாக இவர்களின் செயல்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி விவசாயிகளுக்கான கொடுப்பனவை தடுத்து நிறுத்திய டக்ளஸ் மற்றும் சந்திரகுமார்
நாடுமுழுவதும் ஏற்பட்ட கடுமையான வறட்சி அதனைத் தொடர்ந்து, பாரிய வெள்ள அழிவுகள் காரணமாக வட கிழக்குப் பகுதிகளில் விவசாயிகள் கடுமையான அழிவுகளைச் சந்தித்தனர்.
இதற்கான நஸ்ட ஈடாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 2800 ரூபா வீதமும் 5 ஏக்கரும் அதற்கு மேற்பட்டவர்க்கும் மொத்தமாக 14,000 ரூபா வீதம் இன்றைய தினம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு குறிப்பாக பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இராமநாதபுரம், வட்டக்கட்சிப் பகுதி விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு 50 மில்லியன் ஒதுக்கப்பட்டு இன்றையதினம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பலரது துன்பங்களில் இன்பத்தை பெற நினைக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தம்முடைய அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த பணத்தை வழங்காமல் அவை தடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது.
இத்தொகை விவசாயிகளுக்கு விதை நெல்லுக்காக வழங்கப்பட்ட பணம். ஏற்கனவே இப்பணம் அநுராதபுரம், பொலநறுவை, மன்னார் மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இப்பொழுது தேர்தல் காலமாக இருந்தும் கூட தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அவர்களும் இந்நிதியை வழங்குவதற்கு ஒப்புதலளித்தார்.
இந்நிலையில் தொடர்ந்தும் விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் டக்ளஸ், சந்திரகுமார் ஆகியோர் இப்பணத்தினை சுருட்டி வைத்திருக்கிறார்கள்.
தொடர்ச்சியான வறட்சியால் கடந்த சிறுபோகத்தில் ஏராளமான ஏக்கர் பயிர்கள் எரிந்து நாசமாகின. அதில் பாரியளவில் நஸ்டமடைந்த விவசாயிகள் மீண்டெழுவதற்கு முன்னர் தற்போது பெய்து வரும் கடும்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் ஏராளமான பயிர்கள் மூழ்கி நாசமாகின.
இதற்கான நஸ்ட ஈட்டைக்கூட வழங்குவதற்கு தடை விதித்த இவர்களின் செயலால் விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளதுடன் கொதித்து போயுள்ளார்கள்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila