எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்த போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களை புறக்கணிப்பதன் மூலம் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் வெகு விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ தேவைகளுக்காக இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியவுடன் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.