வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் தற்துணிவு நடவடிக்கைகளினை கேள்விக்குட்படுத்துவது குறித்து வட க்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் வடக்கு மாகாண சபை, மாகாண சபை போல் இயங்க வேண்டுமெனவும் மாநகரசபை போல் இயங்கக் கூடாது எனவும் அவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் உறுப்பினர் பரஞ்சோதி 40 இற்கும் மேற்பட்ட கேள்விகளினை முன்வைத் திருந்தார்.
இக் கேள்விகள் குறித்து வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஆயூப் அஸ்மின் சபையில் ஒழுங்குப்பிரச்சினை குறித்தும் கேள்விக்குட்படுத்தியி ருந்தார்.
இந்நிலையில் நாளை மறு தினம் செவ்வாய்க்கிழமை நடை பெறவுள்ள வடக்கு மாகாண சபை அமர்வின் போது முதல மைச்சரிடம் சில உறுப்பினர்க ளினால் கேள்விகள் முன்வைக் கப்பட்டுள்ளதாக அறிய முடி கின்றது.
இதன்போது முதலமைச் சரின் பிரத்தியேக செயலாளர் குறித்தும் கேள்விக்குட்படுத்த லாம் என கூறப்படுகின்றது.
வடக்கு மாகாண முதலமை ச்சரின் இவரது தற்துணிவு நட வடிக்கைகளினை கேள்விக் குட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என உறுப்பி னர்கள் அதிருப்தி தெரிவித்துள் ளனர்.
இது குறித்து வடக்கு மாகாண சபையின் அருங்காட்சி உறுப் பினர் சிவாஜிலிங்கத்திடம் கேட் கப்பட்ட போது,
முதலமைச்சர் மீது தொடர் ந்து கேள்விகளை முன்வைப் பது பொருத்தமற்ற செயற்பா டாகும். இது துர்நோக்கம் கொண்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.
முதலமைச்சர் தனது உத வியாளராக அல்லது செயலா ளராக யாரை வேண்டுமானா லும் வைத்திருக்க முடியும். இதனை யாராலும் கேள்விக் குட்படுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.