விடுவியுங்கள் அல்லது விசாரியுங்கள் 15 தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்


புதிய மெகசின் சிறைச்சாலையில் உள்ள 15 அரசியல் கைதிகள் நாளை முதல்  மீண்டும் சாகும் வரையான உணவு தவிர்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக  அறிவித்துள்ளனர். 
இது தொடர்பாக அவர்களுடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கயில்,

தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தெரியப்படுத்துவது யாதெனில் 6-2 வருடங்களாக பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ்  கைதுசெய்யப்பட்டு எது விதமான விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். 
எம்மில் 15 பேர் மட்டுமே நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றோம். 

இதன்போது எமது பிரச்சினைகள் தொடர்பாக நீதவான் நீதிமன்ற நீதிபதியிடம் கேட்கும் போது எமது பிரச்சினைகள் தொடர்பாக தனக்கு முடிவு எடுப்பதற்கு அதிகாரம் இல்லையென கூறிவருகின்றார். 

எனவே வேறு வழிகள் எதுவும் செய்ய முடியாதா நாம் உணவுத தவிர்ப்பு  போராட்டத்தை  கையிலெடுத்துள்ளோம்.  இப்போராட்டத்தில் 15 பேர் மட்டுமே ஈடுபட உள்ளோம். கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் அனைவரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நடத்திய போது எம்முடன் இருந்த 39 பேர் பிணை மூலமாக விடுதலை செய்யப்பட்டனர். மற்றையஅனைவரும் தொடர்ந்தும் எதுவிதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளளோம். 

எமது போராட்டம் நாளை  காலையில் இருந்து ஆரம்பமாகும் என்பதையும் எமக்கு சாதகமான முடிவுகள் வரும் வரைக்கும் போராட்டம் தொடரும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
இந்த உணவுதவிர்ப்பு போராட்டத்தில பிரமசகாயம். உதயகுமார், சிவசுப்பிரமணியம். தில்லராஜ், நடேஸ்.குகநாதன்,மு.சிவநாதன்,மா.நீதிநாதன்,க.வேதநாயகம்,ந.தர்மராஜா,சு.ஞானசீலன்,ளு.தயாபரன்,செல்லத்துரை.கிருபானந்தன்,தி.மனோகரன்,யோசப். செபஸ்சியான், சுப்பிரமணியன். கபிலன், இராசதுரை. திருவருள், இரவீந்திரன். மதனி ஆகியோர் ஈடுபடவுள்ளோம். 

அத்துடன் எமது உருக்கமானவேண்டுகோள், யாழ் பல்களைக்கழக மருத்துவபீட மாணவச் செல்வங்களே, கண்டி பேராதனை மருத்துவபீட மாவணவச் செல்வங்களே, சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கம் ஊடாக எமது வித்துடலைப் பெற்று எந்த தமிழ் அரசியல் வாதிகளுக்கும் அடிபணியாது போராட்டத்தை முன்னேடுக்குமாறும்  அதேபோன்று புலத்தில் வாழும் மாணவச் செல்வங்களும்,  இளையோர்களும், எமதுமக்களும் போராட்டத்தை முன்னேடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila