கண்ணீர் சிந்திய காணாமற்போனோர்களின் உறவினர்களும் ஹுசைனின் பதிலும்

al-jaf

கண்ணீர் சிந்திய காணாமற்போனோர்களின் உறவினர்களும் ஹுசைனின் பதிலும்

உங்களுடைய பிரச்சினைகளை நான் ஏற்கனவே முழுமையாக அறிந்துவைத்துள்ளேன். எனவே காணாமல் போனோரை கண்டறிவதற்கான நடவடிக்கைக்கு எம்மால் அழுத்தங்கள் கொடுக்கப்படும் என காணாமல்போன உறவினர்களுடனான சந்திப்பின்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட ஆணையாளர் ஹுசைன், வட மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்காக அவருடைய அலுவலகத்திற்குச் சென்று திரும்பியபோது அலுவலகத்திற்கு வெளியே ஒன்று கூடியிருந்த காணாமல்போனோரின் உறவினர்களுடன் உரையாடும்போதே  மேற்கண்ட­வாறு கூறினார்.
இதே வேளை ஆணையாளருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு முடியும் வரை அங்கு குழுமியிருந்த காணாமல் போனேரின் உறவுகள், சந்திப்பை முடித்து ஹுசேன் வெளியில் வந்ததும் அவரை சூழ்ந்து கொண்டு எமது உறவுகளை கண்டுபிடித்து தாருங்கள். உங்களையே
நம்பியிருக்கின்றோம். எமது பிள்ளையை ஒரு தடவையேனும் காட்ட ஏற்பாடு செய்யுங்கள் எனக் கதறி அழுதனர்.
காணாமல் போன எம்மவர்கள் உயிருடனே உள்ளனர் ஐயா!. எமது உறவுகளை தேடி தாருங்கள், இல்லையேல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தாருங்கள். எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வுமே இல்லையா?. அவ்வாறாயின் நாம் எமது பிள்ளைகளின்றி எதற்காக உயிர் வாழ வேண்டும். நாம் உயிர் வாழ்வதில் எவ்வித அர்த்தமுமில்லை. எமக்கு சாவை தவிர வழியே இல்லையா?. நாம் என்ன பாவம் செய்தோம். காணாமல் போன பிரச்சினைக்கு இன்று எமக்கு இறுதி முடிவு கிடைத்தே  ஆகவேண்டும். எம்மவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா ? எமக்கு முடிவினை ஹூசேன் ஐயா வழங்க வேண்டும் என்றவாறு காணாமல் போனவர்களது
உறவினர் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹூசைன் முன்னிலையில் கதறி அழுது புலம்பி மன்றாடினர்.
இதன் போது காணாமல் போன­வர்கள் தொடர்பிலான பிரச்சினையை நான் நன்கு அறிந்துள்ளேன் என மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் தெரிவித்தார். காணாமல் போனவர்களது உறவினர்களது தங்களது காணாமல் போன உறவினரின் புகைப்படங்களை கையிலேந்தியிருந்ததுடன் தமது உறிவினர்களை மீட்டு தருமாறு கோரும் வாசகங்களடங்கிய சுலோகங்களை கைகளில் வைத்துக்கொண்டு அழுது புலம்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பயனில்லை. எமது உறவினர்கள் உயிருடன் உள்ளனர். ஒற்றுமை என்ற பெயரில் எமது உறவினரை மறைத்து வைத்துள்ளனர். தற்போது வந்துள்ளவரும் எமது உறவினரை காண்பிப்பதாக இல்லை. இறுதி முடிவு எமக்கு கிடைத்தே ஆகவேண்டும். அதற்காகவே நாம் இங்கு வருகை தந்துள்ளோம். இந்த வாய்ப்பை நழுவ விட்டால் எமக்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. நாம் என்ன பாவம் செய்தோம். எமக்கு ஏன் இப்படி ஒரு சோதனை. நாம் நிம்மதியாக வாழ விரும்புகிறோம்.எமது உறவினரை மீட்டு தந்தால் அது எமக்கு போதுமானது. என கண்ணீர் சிந்திய வண்ணம் மன்றாடினர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila