இதன்போது, மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்னர் ஜே.வி.பியை உடைக்கின்றார், ஐக்கிய தேசிய கட்சியை உடைக்கின்றார், பல்வேறுபட்ட கட்சிகளிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றார் மிக மோசமான ஜனநாயக விரோதி என்றெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அது தமிழரசுக் கட்சியாலும், தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்று இதே தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் ஏனைய தமிழ் கட்சிகளை நிர்முலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டு வருவது விரும்பத்தக்கது அல்ல. அது ஒரு வேதனைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை நிர்மூலமாக்குகிறது தமிழரசுக் கட்சி! - சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
Add Comments